Aran Sei

இந்தியாவிடமிருந்து ரூ 12,500 கோடியை பெற்றே தீருவோம் – முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கும் கெய்ர்ன்

கெய்ர்ன் எனர்ஜி - Image Credit : Business Standard

ந்திய அரசு பணத்தைத் தரா விட்டால் கைப்பற்றுவதற்காக, வெளிநாடுகளில் உள்ள இந்தியச் சொத்துக்களை அடையாளம் கண்டு விட்டதாக நேற்று வெளியான அந்நிறுவனத்தின் வரவு அறிக்கையில்கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியா தனக்குத் தர வேண்டிய தொகையை $170 கோடி (சுமார் ரூ 12,500 கோடி) என்று கெய்ர்ன் குறிப்பிட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான வரி வழக்கு – பிரிட்டனின் கெய்ர்ன் பிரான்ஸ், நெதர்லாந்து, அமெரிக்கா, கனடாவில் நடவடிக்கை

2006-ம் ஆண்டில் கெய்ர்ன் நிறுவனம் இந்தியாவில் அதன் சொத்துக்களை, குழும நிறுவனங்களுக்கிடையே கைமாற்றியது தொடர்பாக, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு ரூ 10,200 கோடி மூலதன ஆதாய வரியும், வட்டியும், அபராதமும் வசூலித்தது. இதனை எதிர்த்து கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து இந்திய அரசு வசூலித்த வரித்தொகையை வட்டியுடனும் இழப்பீடுடனும் திருப்பிக் கொடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்திய அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.

வோடபோனைத் தொடர்ந்து, கெய்ர்ன் வழக்கிலும் தோல்வி – அரசுக்கு ரூ 10,250 கோடி இழப்பு

வெளிநாட்டு நடுவர்மன்ற தீர்ப்புகளை அங்கீரித்து அமலாக்குவதற்கான 1958 நியூயார்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 160 நாடுகளில் உள்ள இந்தியச் சொத்துக்களை தான் கைப்பற்ற முடியும் என்று கெய்ர்ன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் உள்ள முக்கியமான நாடுகளில் இந்த தீர்ப்புக்கான அங்கீகாரம் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை நிறுவனம் ஏற்கனவே எடுத்திருக்கிறது” என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து வர வேண்டிய நிலுவையை மூன்றாம் தரப்பு நிதி நிறுவனங்களுக்கு விற்பதன் மூலமும் பணத்தை பெறலாம் என்று கெய்ர்ன் எனர்ஜி கூறியுள்ளது. இந்த மூன்றாம் தரப்பு நிதி நிறுவனம் இந்திய அரசிடமிருந்து பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கும்.

” ரூ 12,500 கோடி பணத்தை இந்திய அரசு உடனடியாக தர வேண்டும் ” – வரி வழக்கு தொடர்பாக பிரிட்டனின் கெய்ர்ன் நிறுவனம்

“நடுவர் மன்றம் அளித்த நிவாரணத்தை பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ, இந்தியச் சொத்துக்களை கைப்பற்றுவது மூலமாகவோ பெற்று விடுவதில் கெய்ர்ன் நம்பிக்கையுடன் இருப்பதாக” அந்நிறுவனம் தனது நிதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்