Aran Sei

இந்தியாவுக்கு எதிரான வரி வழக்கு – பிரிட்டனின் கெய்ர்ன் பிரான்ஸ், நெதர்லாந்து, அமெரிக்கா, கனடாவில் நடவடிக்கை

கெய்ர்ன் எனர்ஜி - Image Credit : Business Standard

இந்தியாவுக்கு எதிரான வரி வழக்கில், நெதர்லாந்தின் சர்வதேச நடுவர் மன்றத்தில் தான் வென்ற $120 கோடி நிவாரணத்தை பெறுவதற்காக பிரிட்டனின் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதன் மூலம், நிவாரணத் தொகை, அதன் மீதான வட்டி, வழக்கு செலவுகள் உள்ளிட்ட சுமார் ரூ 12,500 கோடியை தனக்கு செலுத்தும்படி இந்திய அரசுக்கு கெய்ர்ன் பிரிட்டன் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் மீது மூலதன ஆதாய வரி விதித்ததன் மூலம், இந்திய அரசு பிரிட்டனுடனான இருதரப்பு ஒப்பந்ததை மீறியதாக நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியிருந்தது.

வோடபோனைத் தொடர்ந்து, கெய்ர்ன் வழக்கிலும் தோல்வி – அரசுக்கு ரூ 10,250 கோடி இழப்பு

இந்த நடுவர் மன்ற தீர்ப்பை அங்கீகரித்து உறுதி செய்யும்படி கெய்ர்ன் அமெரிக்க நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது. இந்திய அரசிடம் கெய்ர்ன் கோரும் தொகையில் 2014 முதல் அரை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டித் தொகையும் அடங்கும்.

இந்திய அரசு பணத்தை கொடுக்கா விட்டால், வெளிநாடுகளில் உள்ள இந்திய சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான கெய்ர்ன் நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கை என்று இந்த வழக்கு தொடர்பான விபரங்களை அறிந்த ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

” வெளிநாடுகளில் இந்தியச் சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை ” – கெய்ர்ன் அச்சுறுத்தல்

“கெய்ர்ன் அமெரிக்க நீதிமன்றத்தில் வெற்றி பெற்றால், வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய சொத்துக்களை கைப்பற்றுவதற்கு அது வழி வகுக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

தான் கைப்பற்றுவதற்கான, இந்தியாவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், ஏர் இந்தியா விமானங்கள், இந்திய கப்பல்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சொத்துக்களை கெய்ர்ன் எனர்ஜி ஏற்கனவே அடையாளம் கண்டிருந்தது.

” ரூ 12,500 கோடி பணத்தை இந்திய அரசு உடனடியாக தர வேண்டும் ” – வரி வழக்கு தொடர்பாக பிரிட்டனின் கெய்ர்ன் நிறுவனம்

இந்தியாவுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை கெய்ர்ன் எனர்ஜி நெதர்லாந்திலும், பிரான்சிலும் பதிவு செய்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. இது தொடர்பாக அந்த நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்த அந்நிறுவனம், இந்திய சொத்துக்களை கைப்பற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவுகள் அவர்களுக்கு அனுப்பப்படலாம் என்றும், அதே போன்ற நடவடிக்கைகளை அமெரிக்காவிலும், கனடாவிலும் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்