Aran Sei

’இந்திய தேசிய ரயில் திட்டம்; 118 கி.மீ தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் பாதை’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ந்திய தேசிய ரயில் திட்டம் 2030 என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்கள் 118 கி.மீ தூரத்துக்கு விரிவுபடுத்தப்படும் என்றும்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜட்டில் அறிவித்துள்ளார்.

அதில், “இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 என்ற திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக அனைத்து அகல ரயில்பாதை வழித்தடங்களும் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும்.” என்று அவர் அறிவித்துள்ளார்.

’மேலும் இரு கொரோனா தடுப்பூசி; தற்சார்பு சுகாதாரத்திற்கு ரூ.64 ஆயிரத்து 180 கோடி நிதி’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ரயில்வே துறையின் முதலீட்டு செலவினங்களுக்காக ரூ.1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளததாகக் குறிப்பிட்டுள்ள நிர்மலா சீதாராமன்,“இந்தியாவில் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் மேம்படுத்தப்படும். அந்த வகையில் கொச்சி மெட்ரோ பணிகள் விரிவாக்கத்துக்கு ரூ.1,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் 118 கி.மீ தூரத்துக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய ரயில்வே வழித்தடங்கள் மேம்பாட்டுக்கு மொத்தம் ரூ.1.10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்