Aran Sei

’எல்ஐசி உள்ளிட்ட அரசு நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடிக்கு விற்க இலக்கு’ – நிர்மலா சீதாராமன்

ரசு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எல்ஐசியின் பங்குகளும் இரு வங்கிகளின் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

’மேலும் இரு கொரோனா தடுப்பூசி; தற்சார்பு சுகாதாரத்திற்கு ரூ.64 ஆயிரத்து 180 கோடி நிதி’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

அதில், ”வரும் 2021-22ஆம் நிதியாண்டில் அரசு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு விற்பனை செய்தவதன் வழியாக நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளும், இரு வங்கிகளின் பங்குகளும் அடங்கும். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.” என்று அவர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக, 2021-22ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

’இந்திய தேசிய ரயில் திட்டம்; 118 கி.மீ தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் பாதை’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மேலும், மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் வழியாக, ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ரூ.1.20 லட்சம் கோடி பொதுத்துறை நிறுவனங்களையும், ரூ.90 ஆயிரம் கோடி வங்கிப் பங்குகளை விற்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், நடப்பு நிதியாண்டில் பங்குகள் விற்பனை செய்ததன் வழியாக ரூ.19,499 கோடி மட்டுமே அரசுக்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்