ஒன்றிய அமைச்சரவையின் செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையிலான உயர்மட்ட குழு தனியார்மயமாக்கப்படவுள்ள பொதுத்துறை வங்கிகளின் பெயர்களை இறுதி செய்துவிட்டதாக சிஎன்பிசி-டிவி 18 இணையதளம் தெரிவித்துள்ளது.
அவற்றுள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (சிபிஐ) உள்ளிட்ட வங்கிகள் இருக்கலாம் என்றும், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு தேவையான சட்டத்திருத்தங்களையும் ஒன்றிய நிதி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றும் அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 24 ஆம் தேதி, இந்திய ஒன்றிய அரசுக்கு கொள்கை ரீதியிலான பரிந்துரைகளை வழங்கும் என்ஐடிஐ ஆயோத் குழுவின் பரிந்துரைகள் குறித்து அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்
இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் பெயர்கள் ஒன்றிய நிதித்துறையிடம் பரிசீலனைக்கு அனுப்பப்படவுள்ளது.
இந்த நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் வழியாக ரூ .1.75 லட்சம் கோடி நிதி திரட்ட, ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.