Aran Sei

வாகன விற்பனை அதிகரிப்பு: தெரிவிப்பது என்ன?

credit: maschinenmarkt.international

யணிகள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக செப்டம்பரிலும் அதிகரித்திருப்பதாக தி இந்து நாளேடு குறிப்பிடுகிறது.

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை காலத்தில் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகும் என்ற எதிர்ப்பார்ப்பின் காரணமாக வாகனங்களின் மொத்த விற்பனை (wholesale) அதிகரித்திருக்கிறது.

இந்தியச் சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாருதி சுசுகி-யின் மொத்த விற்பனை செப்டம்பர் மாதத்தில் 34 விழுக்காடு அதிகரித்தது, அந்நிறுவனம் 1.47 லட்சம் வாகனங்களை முகவர்களுக்கு விற்பனை செய்திருக்கிறது.

சென்ற ஆண்டு இதே இரண்டாவது காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 3,92,130 வாகனங்களை விற்பனை செய்தது. ”நடப்பு ஆண்டின் முதல் பாதியில் விற்பனையில் ஏற்பட்ட சரிவை கொரோனா சார்ந்த இடர்களுடன் இணைத்து பார்க்க வேண்டும்” என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 23.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்தமாக 50,313 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், ஹுண்டாய் நிறுவனத்தின் ஏற்றுமதி 43.5 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 14,857 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 4 விழுக்காடு வளர்ச்சி என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகனங்களின் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது. நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயணிகள் வாகனத் துறை மீட்சிக்கு பண்டிகை காலத்தில் விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பும் பொது முடக்கக் காலத்தில் செலவு செய்யாமல் இருந்தவர்கள் செலவிடுவதும் கைகொடுத்திருக்கிறது என்று டாடா மோட்டார்ஸின் வாகன விற்பனைப் பிரிவின் தலைவர் ஷைலாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

பயணிகள் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றாலும், அளிப்பு சங்கிலி வலைப்பின்னலில் நீடிக்கும் பிரச்சனைகள் காரணமாக மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை பெருக்குவதற்கு தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

உள்ளூர் மட்டத்தில் அமல்படுத்தப்படும் பொது முடக்கம், கொரோனா நோய் பரவல் அதிகரிப்பு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற உதிரி பாகங்கள் மீதான சோதனை அதிகரிப்பு ஆகிய காரணங்களினால் வாகன உற்பத்தியாளர்களுக்கும் விநியோகம் செய்பவர்களுக்கும் பிரச்சனைகள் அதிகமாக உள்ளன என்று மின்ட் நாளேடு குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்