Aran Sei

பொதுச்சொத்து விற்பனை – ரயில் நிலையங்கள் முதல் மைதானங்கள் வரை – 8 அமைச்சகங்களின் பட்டியல்

Image credit : indianexpress.com

விற்பதற்கான பொதுச்சொத்துகளின் பட்டியலை 8 அமைச்சகங்கள் கொடுத்துள்ளன என்றும் அவற்றில் ரயில் நிலையங்கள் முதல் தொலைதொடர்பு கோபுரங்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குழாய் பாதைகள், மின்சார டிரான்ஸ்மிஷன், விளையாட்டு அரங்கங்கள், சாலைகள் வரை அடங்கும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு சொத்துக்களை விற்பதன் மூலம் ரூ 2.5 லட்சம் கோடி நிதி திரட்டும் மோடி அரசின் திட்டத்தின்படி இந்த பொதுச் சொத்துக்களின் பட்டியலை அமைச்சகங்கள் தயாரித்துள்ளன.

இவை மட்டுமின்றி, 150 பயணிகள் ரயில்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படவுள்ளன. இந்திய விமானநிலைய ஆணையம் கூட்டு பங்கு நிறுவனங்களாக இயக்கும் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் அதன் பங்குகளை விற்பது, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானம் போன்ற விளையாட்டு மைதானங்களை குத்தகைக்கு விடுவது ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளன.

அம்பேத்கரின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூக ஒழுங்குக்கு தனியார்மயம் நல்லதா? – ஆனந்த் டெல்டும்ப்டே

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2021-22-ல் விற்பதற்கான சொத்துக்களின் விபரம் பின்வருமாறு

  1. ரயில்வே அமைச்சகம்
    ரூ 90,000 கோடி மதிப்பிலான 50 ரயில் நிலையங்கள், 150 தனியார் பயணியர் ரயில்கள்
  2. தொலைதொடர்பு அமைச்சகம்
    ரூ 40,000 கோடி மதிப்பிலான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், பாரத்நெட் ஆகியவற்றின் சொத்துக்கள்
  3. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
    ரூ 30,000 கோடி மதிப்பிலான 7,000 கி.மீ-க்கு அதிகமான நீளம் கொண்ட சாலைகள்
  4. மின்சாரத் துறை
    ரூ 27,000 கோடி மதிப்பிலான மின்சார டிரான்ஸ்மிஷன் பாதைகள்
  5. இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
    ரூ 20,000 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானங்கள்
  6. விமான போக்குவரத்துத் துறை
    ரூ 20,000 கோடிக்கு 13 விமான நிலையங்கள். டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களின் பங்குகளை விற்றல்
  7. பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம்
    ரூ 17,000 கோடி மதிப்பிலான கெயில், ஐஒசிஎல், எச்பிசிஎல் குழாய் பாதைகள்
  8. கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள் அமைச்சகம்
    ரூ 4,000 கோடி மதிப்பிலான 30-க்கும் மேற்பட்ட கப்பல் நிறுத்தும் பெர்த்துகள் (berths)

நிதி ஆயோக் தயாரித்த திட்டம், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் வைத்த சொத்து விற்பனை திட்டம், பிரதமர் மோடியின் தனியார் துறை ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பொதுச்சொத்து விற்பனை நடைபெறுகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்

அரசின் வரி வருவாய் வீழ்ச்சி அடைந்து வருவதும், கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை இலக்குகளை அடைய முடியாததும் இதற்கு பின்னணியாக அமைந்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்