Aran Sei

‘எங்களுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.30,352 கோடி’ – ஆண்டுக்கு ஆண்டு உயர்வதாக மகாராஷ்ட்ர நிதியமைச்சர் தகவல்

Image Credits: New Indian Express

ரூ.30,352 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ஒன்றிய அரசு மகாராஷ்ட்ராவுக்கு தர வேண்டியுள்ளது என்று அம்மாநில துணை முதலமைச்சரும் மாநில நிதியமைச்சருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 5), அம்மாநில சட்டபேரவையில் மகாராஷ்ட்ரா சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (திருத்தம்)-2021 குரல் வாக்கெடுப்பு வழியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்போது, இது குறித்து பேசிய அஜித் பவார், “ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், மாநில நிதி அமைச்சர்களை சந்தித்து சில முடிவுகளை எடுக்கிறது. அதற்கு பிறகு, ஒன்றிய அரசு முதலில் அவற்றை அமல்படுத்துகிறது. பின்னர் மாநிலங்களும் அம்முடிவுகளை அந்தந்த சட்டபேரவைகளில் நிறைவேற்ற வேண்டும். அதனால்தான், இந்த மசோதா இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அதை நிறைவேற்றியுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

மாநிலங்களுக்குப் பயனளிக்காத ஜிஎஸ்டி; பரிசீலனை செய்ய இதுவே நேரம் – தாமஸ் ஐசக்

“2019-2020 ஆம் ஆண்டில் மகாராஷ்ட்ராவுக்கு மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1,029 கோடி. 2020-21 ஆம் ஆண்டில் நிலுவைத் தொகை ரூ.20,193 கோடியாக உயர்ந்தது. 2021-22 (ஏப்ரல் முதல் மே வரை) நிலுவைத் தொகை மேலும் ரூ.9,130 ​​கோடியாக உயர்ந்துள்ளது. ஆகவே, இன்று வரை ஒன்றிய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை மொத்த ரூ.30,352 கோடியாக உள்ளது.” என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

Source; newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்