Aran Sei

“வங்கிகளை தனியாருக்கு வழங்குவதே அரசின் கொள்கை” – நிதித்துறை செயலாளரின் கருத்துக்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கண்டனம்

credits : india tv news

பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் படிப்படியாக தனியார்மயம் செய்யப்படும் என்றும் பொதுத்துறை வங்கிகளின் தேவை குறைக்கப்படும் என்றும் நிதித்துறை செயலாளர் டி.வி. சோமநாதன் தெரிவித்துள்ளது ”அப்பட்டமான மக்கள் விரோத கருத்து” என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

கடந்த 13-7-21 அன்று, தேசிய செயல்முறை பொருளியல் ஆய்வுக் குழு நடத்திய கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன், வங்கித்துறையை பொறுத்தவரை, ”ஒன்றிய அரசு, பி.ஜே.நாயக் கமிட்டி வழங்கியுள்ள பரிந்துரைகளை தாண்டி செயல்பட விரும்புகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், ” உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய அரசு பொதுத்துறை வங்கிகள் இறுதி வரை பொதுத்துறையிலேயே இருக்கும் எனும் நிலைமையை தாண்டி செயல்பட விரும்புகிறது. பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் படிப்படியாக தனியார்மயம் செய்யப்படும் என்பதை நாங்கள் ஏற்கனேவே அறிவித்துள்ளோம். பொதுத்துறை வங்கிகள்  தனியார்மயம் செய்யப்படும் என்பதற்கும் அவ்வங்கிகளே தனியாராக மாற்றப்படும் என்பதும் இரு வேறு விஷயங்கள். ஆனால் நாங்கள் அவற்றை தனியார்மயமாக்குவதற்கு தீவிரமாக உழைத்து வருகிறோம். இருப்பினும், வங்கித்துறையை பொறுத்தவரை, மிக குறைந்த எண்ணிக்கையிலான வங்கிகளே பொதுத்துறை வங்கிகளாக செயல்படும். அது தான் நடைமுறையில் இருக்கும் அரசின் கொள்கை” என்று தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கடந்த இந்தியன் ஓவர்சிஸ் வங்கி – நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்திய அரசின் நிதித்துறை செயலாளராக இருக்கும் அவர்,  இது தன்னுடைய சொந்த கருத்து எனவும் ஒன்றிய அரசின் கருத்து இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் திட்டக்குழுவின் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, ”வங்கித்துறையில் சீர்திருத்தங்களை துரிதப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற்றிய நீரவ் மோடியின் சகோதரி – வங்கி கணக்கில் இருந்த 17.25 கோடி ரூபாயை ஒன்றிய அரசிடம் அளித்தார்

இது தொடர்பாக அரண்செய்-யிடம் பேசிய, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம், ”133 லட்சம் கோடி மக்கள் பணம் புழங்கும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று கருத்து தெரிவிப்பது, அப்பட்டமான மக்கள் விரோத கருத்தாகும். இது போன்ற கருத்துக்களை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது” என்று தெரிவித்தார்.

சுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம் –  20 ஆயிரம் கோடிக்கு மேல் இருப்பதாக சுவிஸ் சென்ட்ரல் பேங்க் தகவல்

”பெருமுதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான வாரா கடன்களை வசூலிக்க திட்டங்கள் கொண்டு வர வேண்டிய அரசு அதிகாரிகள், இந்த வங்கிகளை அது போன்ற பெருமுதலாளிகளுக்கே தாரை வார்க்க நினைப்பது, அவர்கள் யாருடைய குரலாக ஒலிக்கிறார்கள் என்பதை தெளிவாக்குகிறது. வங்கியில் உள்ள மக்கள் பணம் மக்கள் நன்மைக்கே, தனி பெருமுதலாளிகள் சூரையாடுவதற்கு அல்ல” என்று சி.எச்.வெங்கடாச்சலம் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்