Aran Sei

5G அலைக்கற்றை ஏலத்தில் பங்கெடுக்கப்போவதில்லை – ஏர்டெல்

5G சேவையை விரைவில் தொடங்க நடுத்தர மற்றும் உயர்தர அலைக்கற்றையை அனுமதிக்குமாறு விண்வெளித்துறை மற்றும் பாதுகாப்புத் துறைக்கு இந்தியத் தொலைதொடர்பு துறை வலியுறுத்தியுள்ளது.

இரு துறைகளின் செயலாளர்களுக்கு இடையில் நடந்த விவாதத்தில் 3GHz அலைக்கற்றையை 26Ghz-28Ghz வரம்பில் அனுமதிக்குமாறும், 125 MHz அலைக்கற்றையை 3300-3600 MHz வரம்பில் மறுஒதுக்கீடு செய்யுமாறும் தொலைதொடர்பு துறை பாதுகாப்பு துறைக்கு வலியுறுத்தியுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொலைதொடர்பு துறை 3300MHz-3400 MHz வரபிற்கு மாற்றாக 3000MHz-3100 MHz வரம்பைப் பயன்படுத்துமாறு பாதுகாப்புத் துறைக்கும், 3600-3700 Mhz வரம்பில் அலைக்கற்றை ஒதுக்குமாறு விண்வெளித்துறைக்கும் வலியுறுத்தியுள்ளது.

தொலைதொடர்பு நிறுவனங்கள் திறம்பட 5G சேவையை வழங்க தொலைதொடர்பு துறை தற்போது 400 Mhz தொடர்ச்சியான அலைக்கற்றையை(contiguous spectrum) நடுத்தர வரம்பில்(medium band) செயல்படுத்த இருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) 3300-3600 Mhz வரம்பு வகைப்பட்ட அலைக்கற்றைக்கு ஒரு மெகாஹர்ட்ஸ்-க்கு ரூ.492 கோடி என்று விலை நிர்ணயம் செய்துள்ளது.

தொலைதொடர்பு நிறுவனங்கள் 3,300-3,600 Mhz வரம்பில் 5G சேவையைச் செயல்படுத்த கதிரியக்க அலைகளை(radiowaves) வாங்குவதற்குக் குறைந்தது ரூ.9,840 கோடி செலவாகும் என்றும் 20 MHz வீதம் ஏலத்தில் விடப்படும் என்றும் TRAI தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துப்படி குறைந்தது 5G சேவையைச் செயல்படுத்த 80-100 Mhz வரம்பிலான அலைக்கற்றை தேவைப்படும் என்று கூறியுள்ளனர்.

ஏர்டெல் நிறுவனம் 5G சேவையைச் செயல்படுத்த ரூ.50,000 கோடி செலவிட வேண்டியுள்ளதால் இந்த ஏலத்தில் பங்குகொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

“நாங்கள் 5G சோதனைக்குத் தொலைதொடர்பு துறை வலியுறுத்திய 26GHz-28GHz வரம்பு அலைக்கற்றையைத் தேடுகிறோம் ” என்று இந்தியத் தொலைதொடர்பு நிறுவனங்களின்(COAI) இயக்குநர் எஸ்பி கொச்சார் தெரிவித்துள்ளார்.

2019 டெல்லியைச் சேர்ந்த டெல்கோ குழுமம் கம்பியில்லா இணைய சேவைக்கு 26-28GHz வரம்பிலான அலைக்கற்றை அவசியம் தேவைப்படும் என்று தொலைதொடர்பு துறைக்குத் தெரிவித்துள்ளது.

தொலைதொடர்பு நிறுவனங்கள் E மற்றும் V வகை அலைக்கற்றைகளை வாங்குவதற்காகத் தேடுகிறது. தொலைதொடர்பு துறை நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கும் முறை  விதிகளுக்கு இடையுறு ஏற்படுத்துவதாகவும் அதனால் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் இருப்பதாகவும் தி எக்கானமிக் டைம்ஸில் செய்தி வெளியாகியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்