டிடிஎச் சேவை நிறுவனங்களில் 100% அன்னிய முதலீட்டை அனுமதித்து ஒன்றி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. டிடிஎச் லைசன்ஸ் (உரிம) காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக நீட்டிப்பதாகவும், உரிமத் தொகையை குறைப்பதாகவும், நரேந்திர மோடி தலைமையிலான மதிய அரசின் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
“வர்த்தக அமைச்சகம் டிடிஎச் துறையில் 100% அன்னிய முதலீட்டை அனுமதிப்பதாகக் கூறியிருந்தது. ஆனால், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வழிகாட்டலின்படி அன்னிய முதலீடு 49% மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.” என்று கூறிய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், “இந்த வேறுபாடு இப்போது சரி செய்யப்பட்டு விட்டது” என்று ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருக்கிறார்.
தொலை தொடர்புத் துறையுடன் ஒத்து வரும்படி உரிமக் கட்டணம், மொத்த வருவாயில் 10% என்பதிலிருந்து மொத்த வருவாயில் ஜிஎஸ்டியை கழித்த பிறகு வரும் தொகையில் 8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.
இந்தியாவில் 18 கோடி தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன. அவற்றில் 6 கோடி டிடிஎச் மூலம் நிகழ்ச்சிகளை பெறுகின்றன என்று தெரிவிக்கிறது தி ஹிந்து.
இந்த புதிய வழிகாட்டல்கள், டிடிஎச் துறையில் அதிக முதலீட்டைக் கொண்டு வரும் என்றும், இந்தத் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
வோடபோனைத் தொடர்ந்து, கெய்ர்ன் வழக்கிலும் தோல்வி – அரசுக்கு ரூ 10,250 கோடி இழப்பு
தொலைதொடர்பு சேவை வழங்கும் ஏர்டெல் நிறுவனம் டிடிஎச் சேவையும் வழங்கி வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு, டிடிஎச் சேவை நிறுவனங்களில் முதலீட்டுக்கு இருந்த 49% வரம்பு தடையாக இருந்தது. அது இப்போது நீக்கப்பட்டுள்ளது என்று கிரிராஜ் தாகா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
Airtel 100% foreign investment is subject to certain conditions and one of the condition was getting 100% FDI in DTH segment. https://t.co/Ap3PaJJePB
— Giriraj Daga (@GirirajDaga5) December 23, 2020
இதன் மூலம் டிடிஎச் துறையில் நிதி மூலதன நிறுவனங்கள் மூலமாக, நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படுவது நடக்கலாம் என்று சஞ்சய் ஜெயின் என்ற முதலீட்டாளர் ட்வீட் செய்துள்ளார்.
With 100% FDI, now consolidation can happen in #DTH backed by PEs! https://t.co/kGD73zSCHG
— Sanjay Jain (@sanjayjain2012) December 23, 2020
அரசுக்குச் சொந்தமான, திரைப்படப் பிரிவு, திரைப்பட விழாக்களுக்கான இயக்குனரகம், தேசிய திரைப்பட காப்பகம், குழந்தைகள் திரைப்பட சங்கம் ஆகிய நான்கு திரைப்படத் துறை தொடர்பான நிறுவனங்களை தேசிய திரைப்படை வளர்ச்சி நிறுவனத்துடன் இணைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.