Aran Sei

நிதி பற்றாக்குறை இலக்குகளை திருத்தியமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை

நேற்று (செப்டம்பர் 4) பதினைந்தாம் நிதி ஆணையத்தின் பொருளாதார ஆலோசனை கவுன்சல் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நிதி பற்றாகுறை இலக்கை திருத்தியமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு பதினைந்தாம் நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே. சிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகையில், நிதி பற்றாகுறை 2.8 விழுக்காட்டிலிருந்து 3.2 விழுக்காட்டு வரையிலான எல்லைக்குள் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தார். அவ்வாறு திருத்தியமைப்பது பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை தலைவர் ஜோதி சிவஞானத்திடம் கருத்து கேட்டப்போது, நிதி பற்றாகுறை இலக்குகளை திருத்தியமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறுகிறார். ஏற்கனவே, இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு கடன் வாங்க வேண்டிய எல்லையை தாண்டிவிட்டது என்று கூறும் ஜோதி சிவஞானம், வருவாய் பற்றாகுறையை (revenue deficit) பூஜியம் விழுக்காட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்ற இலக்கு பற்றி என்.கே.சிங் எதுவும் பேசாததை சுட்டிக்காட்டுகிறார்.

இந்த ஆண்டு மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து 1.64 இலட்சம் கோடி கடன் வாங்க உள்ளன. இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கடனின் அளவை 85 விழுக்காடாக்கும் என்று சிவஞானம் கூறுகிறார்.

நிதி பற்றாகுறை இலக்கை திருத்தியமைப்பது பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் என்ற வாதம் நன்மையை பயக்குமா? என்ற கேள்விக்கு, இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் (household savings) 7 விழுக்காடு அளவுக்கு வீழ்ந்துள்ளது என்று கூறும் ஜோதி சிவஞானம், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 14 விழுக்காடு அளவுக்கு கடன் வாங்க உள்ளதால், இது வட்டி விகிதத்தின் மீது மிகப் பெரிய தாக்கம் செலுத்துவதுடன் வட்டி விகிதத்தை உயர்த்தவும் செய்யும் என்று கூறுகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்