Aran Sei

எங்களுக்கு நிரந்தர வீடு வேண்டும் – சாலையோர மக்கள் அரசிடம் மனு

credit : ipleaders.in

லக வீடற்றவர்கள் தினமான இன்று வடசென்னையை சேர்ந்த சாலையோரம் வசிக்கும் மக்கள் சென்னை மாநகராட்சிக்கு நிரந்தர வீடு வேண்டி மனு கொடுத்துள்ளனர்.

கொரோனா காலத்தில் அவர்கள் சொல்லமுடியாத துயரங்களுக்கு உள்ளானதாகவும் தி இந்து– விடம் தெரிவித்துள்ளனர்.

1800 க்கும் மேற்பட்ட வீடற்ற குடும்பங்கள் ராயபுரம், பாரிஸ் மற்றும் மண்ணடியை சுற்றி 60 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.

“கொளுத்தும் வெயிலோ அடைமழையோ நடைபாதை தான் எங்களுக்கு அடைக்கலம். எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, எங்களது குழந்தைகள் படிக்க சிரமபடுகிறார்கள். நாங்கள் தொடர்ந்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு மனு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்” என்று மனுதாரர்களில் ஒருவரும், சாலையோரத்தில் குடியிருப்பவருமான சரஸா தி இந்து-விடம் தெரிவித்துள்ளார்.

“தமிழக அரசு எங்களிடம் 10 சதவிகிதம் எதிர்பாக்கிறது. நாங்கள் தவணை முறையில் கொடுக்க தயாராக உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

வீடற்ற மக்கள் நிறைய பேர் இந்த கொரோனா தொற்று காலத்தில் உணவு இல்லாமல் தவித்ததாக கூறியுள்ளனர்.

“எங்களுக்கு வேலை இல்லை. எனவே நாங்கள் எதாவது நன்கொடையை எதிர்பார்த்தோம். நாங்கள் பொது கழிப்பறையை பயன்படுத்துவதால் தொற்று ஏற்படும் அபாயத்தில் இருக்கிறோம். ஏற்கனவே எக்மோரில் சாலையோரத்தில் குடியிருக்கும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது” என்று டேவிட்சன் தெருவை சேர்ந்த லீலாவதி தெரிவித்துள்ளார்.

ரத்தன் பஜாரில் வசிக்கும் ராணியா என்பவர் “எங்களில் சிலருக்கு ஆதார் கார்டு இல்லை, ரேஷன் கார்டு இல்லை. எங்களில் சிலருக்கு வயதானோர் மற்றும் கணவனை இழந்தோருக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அரசாங்கம் எங்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்” என்று தி இந்து –விடம் சாலையோரத்தில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடற்றவர்கள் இருபதாக கூறுகிறது. இதில் 46 சதவிகிதத்தினர் 35 வயதுக்கு குறைவானவர்கள். 86.6 சதவிகிதத்தினர் இந்துக்கள், 7.8 சதவிகிதத்தினர் இஸ்லாமியர், 5 சதவிகிதத்தினர் கிறிஸ்தவர்கள்.

66.4 சதவிகிதத்தினர் ஆதார் கார்டு வைத்துள்ளனர், 37.3 சதவிகிதத்தினர் ரேஷன்கார்டு வைத்துள்ளனர், 39.5 சதவிகிதத்தினர் வாக்காளர் அட்டை வைத்துள்ளனர், 27.7 வங்கிகணக்கு வைத்துள்ளனர். 30 சதவிகிதத்தினரிடம் எந்தவித அடையாள அட்டையும் இல்லை.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்