Aran Sei

பொருளாதாரத்தை மட்டுமே அளவீடாகக் கொண்டு ‘கிரீமி லேயர்’ பிரிவினரைக் கண்டறிவது தவறு- உச்சநீதிமன்றம் உத்தரவு

பொருளாதாரத்தில் உயர்நிலையில் இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட சமூக மற்றும் பிற அளவீடுகளில் பின்தங்கிய  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு  மறுக்கக்கூடாதென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பொருளாதாரத்தை மட்டுமே அளவீடாகக் கொண்டு கிரீமி லேயர் பிரிவினரைக் கண்டறிவது தவறு என்றும் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் அனிருத்த போஸ் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.

ஹரியானா அரசு பிறப்பித்த இரண்டு உத்தரவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது,  “ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் அகில இந்திய சேவைகள் போன்ற உயர் பதவிகளை வகித்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாடு  அடைந்திருப்பின் அவர்கள் ‘கிரீமி லேயர்’ பிரிவில் அடங்குவார்கள் என்றும்,   அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதப்படுவதற்கு தகுதியற்றவர்கள் ” என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. 

மேலும், “இவர்களைப் போன்று  போதுமான வருமானம் ஈட்டி அடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் உயர் சமூக நிலையில் உள்ளவர்கள், அதிகப்படியான நிலம் வைத்துள்ளவர்கள் அல்லது நிலத்தின் வழியாக நிர்ணையிக்கப்பட்டதை விட அதிகவருமானம் ஈட்டக்கூடியவர்கள் அவசியமாக  பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலிருந்து விலக்கப்பட வேண்டும்” என்றும்  நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் குறிப்பிட்டுள்ளார்.

source: தி இந்து

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்