Aran Sei

பொருளாதார நெருக்கடி: அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள்

லங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டை விட்டு வெளியேறிய 6 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, இலங்கைக்கு அருகே உள்ளதால் அங்குள்ள நான்காம் மணல்திட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 இலங்கைத் தமிழர்கள் நேற்று (மார்ச் 22) அதிகாலை வந்து இறங்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா: பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்க வலியுறுத்திய பாஜக எம்எல்ஏ

அகதிகளாக வந்திறங்கிய கஜேந்திரன் (24), அவரது மனைவி மேரி கிளாரின் (23) மற்றும் அவர்களது 4 மாத குழந்தை நிசாந்த் மற்றும் கணவனை இழந்த கியூரி (28) மற்றும் அவரது இரு குழந்தைகளான எஸ்தர் (9), மோசஸ் (6) ஆகியோரை நேற்று அதிகாலை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளனர்.

“இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 1,900 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை 130 ரூபாயிலிருந்து 230 ரூபாயாக உயர்ந்துள்ளது” என்று கியூரி கூறியுள்ளார்..

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீண்டும் ஆராய குழு அமைக்கவும் – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம்

“எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. மேலும் எங்களின் கூலியும் அதிக அளவில் குறைக்கப்பட்டது. எங்களால அங்கு வாழ முடியாத நெருக்கடியால் தான் தமிழ்நாட்டிற்கு வந்தோம்” என்று கடலோரக் காவல்படையினரிடம் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த முன்னாள் கைதியான கஜேந்திரன், ஓராண்டுக்கு முன்புதான் இலங்கை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இது இதுவரை நாங்கள் பார்த்த இலங்கையல்ல. கணவனை இழந்த பிறகு எனது வாழ்க்கை மிக மோசமாக மாறியது. எனது 2 குழந்தைகளை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டேன். அதனால் நாங்கள் படகில் ஏறி இங்கு வந்தோம்” என்று கியூரி கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகிறதா? – தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும் என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் தகவல்

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் அனுமதியின்றி தமிழகத்துக்குள் நுழைந்த 6 இலங்கைத் தமிழர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள கடலோரக் காவல்படையினர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்