Aran Sei

தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா தாக்கப்பட்ட விவகாரம் – பாதுகாப்பு அதிகாரி பணி இடைநீக்கம்

Image credit : twitter feed

மேற்கு வங்கம் நந்திகிராமில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவர் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் ஞாயிற்கிழமை (மார்ச் 14) உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 10 ஆம் தேதி மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு, நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொண்டு போது, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்க அரசின் தலைமை செயலாளர், தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர் அஜய் நாயக், சிறப்பு காவல் பார்வையாளர் விவேக் துபே ஆகியோர் சமர்பித்த அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் ஞாயிற்கிழமை (மார்ச் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் விசாரணைக்குப் பிறகு, மேற்கு வங்க பாதுகாப்பு இயக்குநர் விவேக் சஹாய், புர்பா மேதினிபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் பிரகாஷ்  ஆகியோரை இடை நீக்கம் செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்