Aran Sei

அசாமில் பாஜகவின் முழுப்பக்க தேர்தல் விளம்பரம் – வெளியிட்ட நாளிதழ்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்

சாமில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் வெற்றி பொறுவோம் என்ற பாஜகவின் முழுப்பக்க தேர்தல் விளம்பரங்களை வெளியிட்ட 8 தினசரி நாளிதழ்களுக்குத் தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புள்ளது.

தலைப்புச் செய்திகள் போன்று வெளியிடப்பட்டிருந்த விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல், மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 1951 ஆகியவற்றை மீறுகிறது என காங்கிரஸ் கட்சியினர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆங்கிலம், அஸ்ஸாமிய, இந்தி, பெங்காலி மொழி நாளிதழ்களான அசாம் டிரிப்யூன், அசோமியா பிரதிதீன், அமர் அசாம், நியாமியா பார்தா, அசோமியா கபோர், தைனிக் அசம், தைனிக் ஜுகாசங்கா மற்றும் தைனிக் புர்வோதயா ஆகிய 8 நாளிதழ்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அசாமில் சிஏஏ பற்றி வாய் திறக்காத பாஜக : குற்றம்சாட்டும் காங்கிரஸ் கூட்டணி

மேலும், அந்த நோட்டீஸில், தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்தும் அறிக்கையைத் திங்கள் (மார்ச் 29) மாலை 7 மணிக்குள் அசாம் தலைமை தேர்தல் ஆணையர் நிதின் கடேவிற்கு அனுப்புமாறு நாளிதழ்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாளிதழ்கள் தங்கள் அறிக்கைகளைச் சமர்பித்துவிட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் முதற்கட்டமாக மார்ச் 27 ஆம் தேதி 47 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என தலைப்பு செய்திவடிவிலான விளம்பரத்தை மார்ச் 28 ஆம் தேதி பாஜக வெளியிட்டிருந்தது.

மேலும், இது தொடர்பாக அசாம் மாநில காங்கிரஸ் கட்சி அளித்திருந்த புகாரின் அடிப்படையில், அம்மாநிலத்தின் திஸ்பூர் காவல்நிலையத்தில், அசாம் மாநில முதலமைச்சர் சர்பநந்த சோனோவா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் ஆகியோர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்