Aran Sei

மம்தா தாக்கப்பட்ட விவகாரம் – விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

Image credit : twitter feed

தேர்தல் பிரச்சாரத்தின்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தாக்கப்பட்டது தொடர்பாக அம்மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கை, ஜோடிக்கப்பட்டது போல தோன்றுவதால் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு  மேற்கு வங்க தலைமை தேர்தல் ஆணையர் அலபன் பந்தோபாத்யாயவிடம், தலைமை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில், மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய அம்மாநில தலைமை செயலாளரிடம் தலைமை தேர்தல் ஆணையர் கோரியுள்ளார்.

பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் – விவசாய சங்கம் அறிவிப்பு

மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த அறிக்கையில், சம்பவம் எப்படி நடந்தது, யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது போன்ற எந்த விவரமும் இல்லாமல், மிகவும் தெளிவற்று இருந்தது. எனவே இது தொடர்பான முழு விவரங்களைத் தருமாறு மாநில நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம்” என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையத்திடம், வெள்ளிக்கிழமை மாலை மாநில அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், அந்த இடத்தில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது என்று குறிப்பிடுகிறது, ஆனால் பானர்ஜி தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டிய “4-5 நபர்கள்” பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

புர்பா மேடினிபூர் மாவட்டத்தில் நந்திகிராம் பகுதியில் உள்ள பிருலியா பசார் பகுதியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தாக்குதல் குறித்த தெளிவான வீடியோ காட்சிகள் எதுவும் இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்