Aran Sei

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் விலை உயர்வு

க்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரால், சமையல் எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 15 நாட்களில் சமையல் எண்ணெய் விலை 20 முதல் 30விழுக்காடு விலை அதிகரித்துள்ளது. பாமாயில் லிட்டருக்கு 210 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்ந்தாலும், பருத்தி விதை, கடுகு, கடலை எண்ணெய்க்கு ரூ.30, ரூ.10, ரூ.40 என விலை உயர்ந்துள்ளது.

இந்தியத் தூதரகம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறது – உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர் குற்றச்சாட்டு

குஜராத் மாநில சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சங்கத்தின் தலைவர் சமீர் ஷா கூறுகையில், சூரியகாந்தி விதைகளின் உலகளாவிய உற்பத்தியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் 90% பங்கு வகிக்கின்றன. ”இரு நாடுகளிலிருந்தும் ஆண்டுக்கு சுமார் 5,00,000 டன் சூரியகாந்தி எண்ணெயை இறக்குமதி செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதன் விநியோகத்தில் ஏற்படும் இடையூறு இந்தியா முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியை பாதிக்கும். 15 லிட்டர் கொண்ட டின்னுக்கு ரூ.2,500 முதல் ரூ.2,550 வரை இருந்தது.  தற்போது விலை 20 விழுக்காடு விலை அதிகரித்து ரூ.2,900 ஆக உயர வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்