Aran Sei

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – மூடப்பட்ட அதானி நிறுவனமும் மக்கள் போராட்டமும்

டெல்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள்  போராடி வரும்  அதேவேளையில் பஞ்சாப் மக்களின் போராட்டத்தின் விளைவாக அம்மாநிலத்தின் கிலா ராய்பூர் பகுதியில்  அமைக்கப்பட்ட அதானி தளவாடப்  பூங்காவை அந்நிறுவனம் மூடுவதாக அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின்  கிலா ராய்பூர் பகுதியில்  சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டிருந்த  பல பயன்பாடுகளைக் கொண்ட  அதானி தளவாடப்  பூங்கா எதிராகக் கடந்த ஆகஸ்ட் 9, 2௦2௦ லிருந்து அப்பகுதி மக்கள்  போராட்டம் நடத்தி வந்தனர்.

ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த  செப்டம்பர் மாதம் அப்பகுதி மக்கள் அங்குள்ள சுங்கச்சாவடிகளைக் கைப்பற்றிப் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்கு பகுதிகளில் போராட்டம் நடத்தியுமுள்ளனர். போரட்டத்தின் ஒரு பகுதியாக ஜியோ தொலைபேசி சிம்களைப் பயன்படுத்துவதில் இருந்து பெருமளவில் வெளியேறியும் உள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தினால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவே போரட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டுமெனக்கூறி  அதானி நிறுவனம்  கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

மேலும், இதுதொடர்பாக மக்களுடன் அதானி நிறுவனம்  பேச்சுவார்த்தை நடத்தியும்  எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இதுகுறித்து தெரிவித்துள்ள பேராசிரியர் சுரேந்திர கில் ஜெய்பால், “அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் போராட்டக்காரர்களை மிரட்டினார். மேலும், நாங்கள் தன்னிச்சையாக அந்த இடத்தை விட்டுச் செல்ல வில்லையென்றால், வேறுவழிகளில் செல்ல வைப்போம் என்று கூறினார்கள். ஒருவேளை நாங்கள் பயந்திருந்தால் அவர்கள் எங்களை மேலும் மிரட்டியிருப்பார்கள். இது இறுதியில் யார் வலிமைமிக்கவர்கள் என்பதைக் குறித்தது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், போராட்டத்தினால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சுமையின் காரணமாக தளவாடப்  பூங்காவை மூடுவதாக அதானி நிறுவனம் கடந்த ஜூலை 31 அன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

Professor Surinder and the protesting women in a celebratory mood. Photo by Aranya Rai Singh

இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அதானி நிறுவனம் கடந்த 2௦17 ஆம் ஆண்டு ஏறத்தாழ 80 பரப்பளவில்  அதானி தளவாடப்  பூங்காவை அமைத்தது குறிப்பிடத்தக்கது

source: தி வயர் செய்தி தளத்தில் திரைக்கலைஞர் நோவிதா சிங் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் 

தொடர்புடைய பதிவுகள்:

ஹைட்ரோ கார்பன் திட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு – தமிழ்நாடு அரசு உத்தரவு

அகதிகளாகும் ஆப்கான் மக்களை ஏற்கும் உலகநாடுகள் – பெருந்துயரமும் மாண்புறும் மனிதநேயமும்

 

 

 

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்