Aran Sei

செய்தித்தாள் அலுவலகத்தின் மீது குண்டு வீசி தாக்கியதன் எதிரொலி: காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள்

னைத்து செய்தியாளர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் காலவரையிற்றி வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இன்று (பிப்ரவரி 14) எந்தச் செய்திதாளும் வெளியாகவில்லை என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு இம்பாலின் கெய்ஷம்பட் பகுதியில் பொக்னாபம் என்ற ஊடக நிறுவனத்தின் அலுவலகம்மீது நேற்று (பிப்ரவரி 13) மாலை 6.30 மணிக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக வேலை நிறுத்தம் நடைபெறுவதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது

‘உங்களால்தான் நாங்கள் இருக்கிறோம்’ – விவசாயிகள் போராட்டக்களத்தில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பு பொறுப்பேற்கவில்லை என அச்ச்செய்தியில் குறிப்பிடப்படுள்ளது.

கையெறிக் குண்டு வெடிக்கவில்லை என்றும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருந்த அந்த நேரத்தில் குண்டு வெடித்திருந்தால் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்திருக்கும் என மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான அந்த அலுவலகத்திலிருந்து மணிப்பூரில் அதிகமாக விற்பனையாகும் பொக்னாபம் என்ற தினசரி நாளிதழும், அதன் துணை வெளியீடான குரோனிக்களும் வெளியாகிறது எனும் செய்தி சொல்லப்படுகிறது.

ப்ரேக் – அப் நல்லது – பொன் விமலா

காவல்துறையினர் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்றும், தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள, இம்பாலின் தகவல்தொடர்பு துறை அமைச்சர் தொங்கம் பிஸ்வாஜித், தனது அறிக்கையில், “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் நான்காம் தூணாக ஊடகம் இருக்கிற்து. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்தக் கடுமையான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

‘அந்தோலன்ஜீவி’கள் (பிழைப்புப் போராளிகள்): 1974 ல் அரசுக்கு எதிராகப் போராடிய போது

அனைத்து மணிப்பூர் உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம், எடிட்டர்ஸ் கில்ட், ஆகிய இரண்டும் சனிக்கிழமை (பிப்ரவரி 13) பிரஸ் கிளப்பில் நடத்திய கூட்டத்தில், அனைத்து வெளியீடுகளையும் நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும், தாக்குதலைக் கண்டித்து மாநிலத்தின் அனைத்து ஊடகமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதோடு, இம்பாலில் உள்ளிருப்பு போராட்டமும் நடந்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தி இந்துவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சில பத்திரிக்கைகள்மீது நடத்தப்பட்டு வரும் வெடிகுண்டுத் தாக்குதல்கள், ஊடவியலாளர்களை போராட தூண்டியிருப்பதாக தி இந்து கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்