Aran Sei

இலங்கை பொருளாதார நெருக்கடி எதிரொலி: தமிழ்நாட்டு மீனவர்களிடம் உணவு, எரிபொருள் கேட்கும் இலங்கை மீனவர்கள்

டந்த ஒரு மாதமாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் உணவு, எரிபொருள், மதுபானம் போன்றவற்றை எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்களும் அவர்களுக்கு அரிசி, உணவு மதுபானம் போன்றவற்றைக் கொடுத்து உதவி வருகின்றனர்” என்று தமிழ்நாடு மீனவர்கள் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி: நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் பச்சிளம் குழந்தையோடு சிக்கித்தவித்த இலங்கைத் தமிழர்கள்

“அண்மையில், நடுக்கடலில் சில இலங்கை மீனவர்களைக் கண்டோம். அப்போது அவர்கள் எங்களிடம் உணவுப் பொருட்களைக் கோரினர். எப்போதும் வன்முறையைப் பயன்படுத்தி பொருட்களை கேட்பவர்கள் இப்போது மிகுந்த அவநம்பிக்கையுடன் பணிவாக எங்களது உதவியை நாடினர்” என்று நாகப்பட்டினம் மாவட்டத்தின் கோடியக்கரையைச் சேர்ந்த ஒரு மீனவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதாரண பொருளாதார நெருக்கடி காரணமாக சில இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கை மீனவர்களும் தங்களுக்குத் தேவையான சில பொருளாதார கோரிக்கைகளைத் தமிழ்நாடு மீனவர்களிடம் கோரியுள்ளனர்.

Source : Newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்