Aran Sei

தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதலமைச்சர் மீதான விமர்சனம் – விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக இன்று (மார்ச் 31) மாலை 6 மணிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம்  கேட்டுக்கொண்டுள்ளது.

மார்ச் 26 ஆம் தேதி ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆ.ராசா தெரிவித்த கருத்துகள் தொடர்பாகத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வழியாக அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.

நான் களத்தில் மக்களுடன் இருக்கிறேன் நீங்கள் தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் : பிரதமரை விளாசிய மம்தா

தேர்தல் ஆணையம், ஆ. ராசாவிற்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், மார்ச் 26 ஆம் தேதி மாலை 7 மணிக்குக் கீழப்பூரிலும், அதே தினம்  இரவு 8.30 மணிக்கு மீன்சுருட்டியிலும் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள்க் காட்டியுள்ளது.

மேலும், அந்த நோட்டீஸில் ஆ. ராசாவின் கருத்துக்கள் தரக்குறைவானது மட்டுமல்ல ஆபாசமானதாகவும் இருக்கிறது. ‘தாய்மையின் கண்ணியத்தை’ குறைக்கும் வகையில் இருக்கும் இந்தக் கருத்துக்கள் தேர்தல் நடத்தை விதிகளைக் கடுமையாக மீறுவதாகத் தோன்றுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்