Aran Sei

சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து பேசிய விவகாரம் – உதயநிதி ஸ்டாலினிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மறைந்த பாஜக அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி தொடர்பாக பேசியதற்காக திமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

திமுக தலைமையிலான கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். மார்ச் 31-ம் தேதி தாராபுரத்தில் செய்த பிரச்சாரத்தின்போது, பாஜக முன்னாள் அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி இருவரும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் உயிரிழந்ததாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தது, சுஷ்மா ஸ்வராஜின் மகள் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடைத்தை விதிமிறலுக்கு எதிராக தனிமனித விமர்சனத்தில் ஈடுபட்டத்தாக உதயநிதி ஸ்டாலினிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக இன்றும் (ஏப்ரல் 7) மாலை 5 மணிக்குள் பதிலளிக்கமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நோட்டீஸிற்கு பதிலளிக்க தவறும்பட்சத்தில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : PuthiyaThalaimurai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்