Aran Sei

மத்திய ஆயுதப் படை குறித்த மம்தாவின் விமர்சனம் : விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுத பாதுகாப்புப் படைகள் குறித்த அம்மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் கருத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேற்று (ஏப்ரல் 8) இரவு, அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், மத்திய ஆயுத பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான அவரது கருத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறும்படியாக இருந்தது என்று தேர்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நோட்டீஸுக்கு நாளை (ஏப்ரல் 10) காலை 11 மணிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் இந்து/இஸ்லாமியர் எனும் விவாத்தை வளர்க்கும் மோடி: நோட்டீஸ் அனுப்புமா தேர்தல் ஆணையம்? – மம்தா கேள்வி

மேலும், மம்தா பானர்ஜியின் கருத்து முற்றிலும் தவறானது. அவரின் ஆத்திரமூட்டும் கருத்தானது, மத்திய துணை ராணுவப் படைகளை அவமதிக்கும் விதமாக இருந்தது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

முன்னர், மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலின் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குபதிவின்போது, மத்திய ஆயுத பாதுகாப்புப் படைகள் பாஜகவிற்கு ஆதரவாக செயற்படுவதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நோட்டீஸானது மம்தா பானர்ஜிக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது நோட்டீஸாகும். இதற்கு முன்னர், சிறுபான்மை வாக்காளர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குகளைப் பிரிக்க வேண்டாம் என்று மம்தா பானர்ஜி விடுத்த வேண்டுகோளானது, மேற்கு வங்கத்தில் அமலில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று கூறி தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்