Aran Sei

கொரோனா சான்றிதழில் மோடி புகைப்படம் – நீக்க சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவு

ட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை  நீக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் நடக்கும் 5 மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  தெரிவித்துள்ளது

மத்திய அரசுத் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்ததை அடுத்து, இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு அம்மாநில தேர்தல் ஆணையரிடம், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

மாற்றுப்பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள்,பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக்கூடாது – உச்சநீதி மன்றத்தில் மனு

“முதலில் உண்மைகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். உதாரணமாக சொல்வதானால், இந்தக் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உண்மையிலேயே சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படிதான் வழங்கப்படுகின்றனவா? தொடர்ந்து நடக்கும் இது போன்ற விஷயங்களில், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகார பூர்வ தரப்பினரிடமிருந்தும் நாங்கள் பதிலை எதிர்பார்கிறோம்.” என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் புகாரை ஏற்று பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பதாகைகளை அகற்ற கோரி 72 மணிநேரம் காலக் கெடு விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்