Aran Sei

‘தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு பூமிபூஜை’ – தமுஎகச கண்டனம்

தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு பூமிபூஜை செய்யப்பட்டது எதற்காக என்று கேள்வி எழுப்பி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமுஎகசவின் மாநிலத்தலைவர்(பொ) மதுக்கூர் இராமலிங்கம்,  பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிச்சநல்லூர் புளியங்குளம் பகுதியில் ஒன்றிய அரசின் தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ள தொல்லியல் அகழ்வாய்வுக் களத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான தொடக்க நிகழ்வு 11.10.2021 அன்று நடத்தப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளரும் திருச்சி மண்டல தொல்லியல் கண்காணிப்பாளருமான அருள்ராஜ் என்பவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு புரோகிதர்களை வைத்து குறிப்பிட்டதொரு மதச்சார்பான சடங்குகளுடன் கூடிய பூஜையாக நடத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பணியாற்றும் ஓர் ஊழியராகிய அவர் அரசு நிகழ்வை இவ்வாறு மதச்சார்பான பூஜையாக நடத்தியுள்ளது அரசமைப்புச் சட்டத்திற்கும் நடத்தைவிதிகளுக்கும் புறம்பானது என தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது.

‘நவராத்திரி கர்ப்பா நடனத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை’ – விஷ்வ ஹிந்து பரிஷத்

ஆரியக் கடவுள்களும் வேதமயப்பட்ட சடங்குகளும் சமஸ்கிருத மந்திரங்களும் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே நிலைபெற்று உச்சத்தில் இருந்த தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மையை அவமதிக்கும் வகையில் இந்தப் பூஜை நடத்தப்பட்டுள்ளமைக்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தைத் தெரிவிக்குமாறு தமுஎகச கேட்டுக்கொள்கிறது என்று மாநிலத்தலைவர்(பொ) மதுக்கூர் இராமலிங்கம்,  பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்