டெல்லி கலவரத்தின் போது டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் ரத்தன் லால் கொல்லப்பட்டது மற்றும் காவல் துணை ஆணையர் தலையில் தாக்கப்பட்டு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
குற்றசாட்டப்பட்டவரில் ஒருவருக்கு எதிராக காவல்துறை சமர்பித்த ஆதாரம் ‘தெளிவற்றதாக’ இருந்ததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ’இலக்கு வைக்கப்பட்ட துன்புறுத்தலுக்கான கருவியாக சட்டம் மாறாமல்’ இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு இருப்பதாக கூறியுள்ளது.
டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறையை கீழமை நீதிமன்றங்கள் கண்டித்திருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டங்களை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24, 2020 ஆம் தேதி டெல்லி சந்த் பாக் பகுதியில் சட்டம் ஒழுங்கு பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கம்பிகள், கட்டைகள், மட்டைகள் மற்றும் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை புறக்கணித்து அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.
”கூட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய தாக்குதல் மற்றும் கண்ணீர்புகை குண்டுகளால் அத்திரமடைந்த ஆர்பாட்டக்காரர்கள், அதிகாரிகளைத் தாக்கினர். அதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார் மற்றும் காவல் துணை ஆணைய ஷாதாராவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது ஆரிப், ஷதாப் அகமது, ஃபர்கன், சுவேலன் மற்றும் தபஸ்ஸம் ஆகியோருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், ”அதிகப்படியான அரசு அதிகாரத்தை ஒரு தனிநபர் எதிர்கொள்ளும் போது, அவரது சுதந்திரம் பறிக்கப்படாமல் உறுதி செய்வது நீதிமன்றத்தின் கடமை” என தெரிவித்துள்ளது.
பிணை வழங்குவது மற்றும் குற்றவியல் நடைமுறைகளைப் பயன்படுத்துவது அவசியமானது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.