Aran Sei

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மோதல் – பாதுகாப்பு படையினர் பொதுமக்களை தாக்கியதாக குற்றச்சாட்டு

த்தீஸ்கர் மாநிலம் டேக்லகுடம் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும் ஆயுதப்படை  பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலின்போது ஆயுதப்படை காவலர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை அத்துமீறி தாக்கியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மோதல் – 22 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு

கடந்த ஏப்ரல் 3 அன்று ,சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 22 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த மோதலின்போது ஆயுதப்படை காவலர்கள் டேக்லகுடம் பகுதி பொதுமக்களை அத்துமீறித் தாக்கியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் அந்த ஹிட்மா? – போலீஸ் படைகள் மீதான பல தாக்குதல்களுக்குப் பின் இருக்கும் நிழலான மாவோயிஸ்ட் தளபதி

இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதியை சேர்ந்த இளைஞர் மங்கிடு பர்சே, தடிகளாலும், துப்பாக்கியாலும் காவல்துறை அவரைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை, மாவோயிஸ்ட்களுக்கும், ஆயுதப்படை காவலர்களுக்கும் மோதல் தொடங்கியபோது 150 க்கும் மேற்பட்ட டேக்லகுடம் பகுதி மக்கள் அருகில் உள்ள பூவர்த்தி பகுதிக்குச் சென்றதாகவும், பின்னர் மோதல் முடிந்த திங்கள் கிழமை அன்று தான் மீண்டும் டேக்லகுடம் பகுதிக்குத் திரும்பியதாகவும் அப்பகுதியை சேர்ந்த சிறுவன் ரமேஷ் கோர்சா தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரி: தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்ட்கள்

இந்நிலையில், ஆயுதப்படை காவலர்களின் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு அப்பகுதி இளைஞர் அச்சம் அடைந்துள்ளதாகவும் தி வயர் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்