Aran Sei

மத நல்லிணக்கத்தை கெடுக்க திட்டமிட்டு தாக்குதல் – துர்கா பூஜை வங்கதேச தாக்குதல் குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் கருத்து

ங்கதேசத்தில் இருக்கும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் திட்டமிட்டு, துர்கா பூஜை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களில் மூன்றாம் தரப்பினர் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தின் கோமில்லா மாவட்டத்தில் அக்டோபர் 14 வியாழன்று கோயில்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

‘துர்கா பூஜை பந்தலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – வங்கதேச பிரதமருக்கு செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

நனுவர் திகி நதிக்கரையில் நடைபெற்ற விழாவில் துர்கா சிலையின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையின் முழங்காலில் குரானி நகல் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

”வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமைச் சேர்ந்தவர்கள், நனுவர் திகர் கோவிலின் உள்ளே சென்று குரானின் நகலை வைத்துப் புகைப்படம் எடுத்துச் சமூக வலைதளங்களில் பரப்பினர். பிரச்சாரம் காட்டுத்தீ போலப் பரவியது” என வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக பட்டினி குறியீடு: ஜெர்மன் அமைப்பிற்கும் ஒன்றிய அரசுக்கும் வலுக்கும் வாதம்

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தால் ஆத்திரமடைந்த கும்பல் நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் துர்கா பூஜை நடைபெற்ற சந்த்பூர், சிட்டகாங், காஜிபூர், பந்தர்பன், சபைனாவாப்கஞ்ச், மௌல்வி பஜார் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவங்களில் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும், வகுப்புவாத பதட்டங்களை அடக்க 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

வரலாற்று ஆவணங்களை ஏலம் விட பிரசார் பாரதி முடிவு: ‘அரசியல் தேவைகளுக்காக வரலாறு சிதைக்கப்படுகிறது’- சு.வெங்கடேசன்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அசாதுஸ்ஸமான் கான், “சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், ஆதாரங்கள் வெளிவரும்போது காரணங்கள் பகிரங்கப்படுத்தப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ‘முன்மாதிரியான தண்டனை’ வழங்கப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

வங்கதேச தேசியவாத கட்சிமீதான குற்றச்சாட்டுகள்குறித்து கேட்டபோது, அந்த குற்றச்சாட்டுகளில் அடிப்படை உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
”எங்கள் பாதுகாப்புப் படைகள் பொறுமையுடன் வேலை செய்கின்றன, நாங்கள் உளவுத்துறை தகவல்களை வைத்து வேலை செய்கிறோம். மத நல்லிணக்கத்தை அழிக்க முயற்சிப்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என கான் கூறியுள்ளார்.

காந்தியின் ஆலோசனையின்படி தான் சாவர்க்கர் கருணை மனு போட்டாரா? – உண்மை என்ன?

கோமில்லா சம்பவத்தைத் தொடர்ந்து, துர்கா பூஜை கொண்டாட்டங்களின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை 200க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரு கோவிலைத் தாக்கியதில், கோவில் குழு உறுப்பினராக இருந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

”ரங்பூரின் கரீம்கஞ்ச் உபசில்லா பகுதியில் புதியதாக ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது. இந்துக்களுக்குச் சொந்தமான 20 வீடுகளை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இஸ்லாமியர்கள் உணர்வுகளை புண்படுத்து விதமாக ஒரு இந்து இளைஞர்கள் முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த வன்முறை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை” என உள்ளூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்