Aran Sei

முகக்கவசம் அணியாத 85,764 பேர் மீது வழக்கு பதிவு – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்

முகக்கவசம் அணியாத 85,764 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள கொலை வழக்குகள்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மேலும், கொரோனா தனிமைப்படுத்துதலில் ஒத்துழைக்காத 117 பேர் மீதும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காத 1,50,318 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காவலர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரனோ குறித்து தெரிவித்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், 3,315 காவலர்கள் இதுவரை கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 87 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் கோயம்பேட்டில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை: வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

தற்போது வரை 6000 காவலர்களுக்கு மட்டுமே கொரனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாவும், காவலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார் .

source; THE HINDU 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்