Aran Sei

‘நிதி நெருக்கடியால் பராமரிப்பு செலவை கொடுக்க முடியவில்லை” – பணக்கார கோவில் நீதிமன்றத்தில் தகவல்

கொரோனா ஊரடங்கின் காரணமாக, கோவில் மூடப்பட்டதால், ’நிதி நெருக்கடி’ ஏற்பட்டிருக்கிறது, என இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றான, கேரளாவின் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அதிகாரிகள், உச்சநீதிமன்றத்தில்vதெரிவித்திருப்பதாக, தி  இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா ஏற்படுத்திய இழப்பின் காரணமாக, கேரள அரசிற்கு செலுத்த வேண்டிய ’பராமரிப்பு’ நிலுவை தொகை ரூ.11 கோடியே 70 லட்சத்தைச் செலுத்த, கோயில் நிர்வாகத்தால் முடியவில்லை என அதிகாரிகள் கூறியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13, 2020 ஆம் ஆண்டு, கோயில் நிர்வாகம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகள் பெரும்பாலும் பின்பற்றப்பட்டுள்ளன என்று, திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி கே.பாபு, தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக, தி இந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார்மயமாகும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை – பதவியை ராஜினாமா செய்த தெலுங்கு தேச சட்டசபை உறுப்பினர்

விசாரணையின் துவக்கத்தில், “கோயிலுக்காக அரசு செலவழித்த பணத்தை திரும்பத் தர வேண்டும்” என, கோயில் நிர்வாகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் உத்திரா பாப்பரிடம், நீதிபதி லலித் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”கோயில் மூடப்பட்டிருந்ததால், நிதி நெருக்கடி ஏற்ப்பட்டிருக்கிறது. கோயில் நிர்வாகத்தினர் கால அவகாசம் கோருகின்றனர்” என பாப்பர் தெரிவித்ததையடுத்து, இதை அரசாங்கமும், கோயில் நிர்வாகமும் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு, நீதிமன்றம் கூறியதாக, தி இந்து குறிப்பிட்டுள்ளது.

”கோயிலின் கணக்குகள் தணிக்கை தொடர்பான விபரங்களை அறிய” செப்டம்பர் இரண்டாம் வாரத்திற்கு வழக்கைத் தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து பின்னர் நீக்கம் – பிரதமர் மோடியை விமர்சித்ததாக உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கை

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பத்மநாப சுவாமி கோயிலின், 25 ஆண்டு கால கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என அளித்த உத்தரவின் அடிப்டையில், தணிக்கை நடைபெற்று வருவதாக கேரளா அரசு வழக்கறிஞர் ஜி.பிரகாஷ் தெரிவித்ததாக, தி இந்து கூறுகிறது.

பத்மநாப சுவாமி கோயிலின் சொத்துக்களுக்கு  மேலாளர் அல்லது பாதுகாவலராக, திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரை அறிவித்து, உச்சநீதிமன்ற 2020 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

‘வானளவு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலை’ – நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்

பத்மநாப சுவாமி கோயில் ஒரு ”பொது கோயில்” என்ற அரச குடும்பத்தினரின் வாதத்தை ஏற்றுக்கொண்டதோடு, எதிர்காலத்தில், கோயிலின் வெளிப்படையான நிர்வாகத்திற்காக, மாவட்ட நீதிபதி தலைமையான நிர்வாக குழு ஒன்றை அமைப்பது உள்ளிட்ட சில வழிமுறைகளை வழங்கி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கோயிலின் தினசரி நிர்வாகத்தைக் கவனித்து கொள்ள அமைக்கப்பட்ட அந்த நிர்வாக குழுவில், அரச குடும்பம் நியமிக்கும் ஒருவர், கோயிலின் தலைமை தந்திரி, மாநில அரசு நியமிக்கும் ஒருவர், மத்திய கலாச்சார அமைச்சகம் நியமிக்கும் ஒருவர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை சென்னை லேபர் கோர்ட்டில் நியமிக்க வேண்டும்’ – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

மேலும் அந்தத் தீர்ப்பில், நிர்வாக குழுவிற்கு கொள்கைரீதியாக ஆலோசனை வழங்க, இரண்டாவது குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இரண்டு குழுவும் தங்களது பணிகளை இரண்டு மாதத்திற்குள் தொடங்கும் விதமாக நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

இந்தக் குழுக்களின் முதன்மை கடமையாக, கோயிலின் பொக்கிஷங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பது, கோயிலின் பெட்டகங்களில் அதிக செல்வம் இருப்பதாக கருத்தப்படும், கல்லரா B அறையைத் திறப்பது தொடர்பாக முடிவெடுப்பது, மத நடைமுறைகள் வழக்கப்படி மற்றும் தலைமை தந்திரியின் ஆலோசனையின்படி, சடங்குகள் நடப்பதை உறுதி செய்யவது ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன.

கோயிலில் இருக்கும் வசதிகளை மேம்படுத்த, கோயிலின் வருமானம் பயன்படுத்தப்படுகிறதா, என்பதை குழுக்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்