Aran Sei

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ’குற்றவாளி ஏழை என்பதாலேயே குறைவான தண்டனை விதிக்க முடியாது’ – உச்சநீதிமன்றம்

போதைப்பொருட்கள் பயன்படுத்தி அப்பாவிகள் இறப்பது மற்றும் கொடூரமான குற்றங்களுக்குக் காரணமாவது குறித்தான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏழை என்பதாலேயே குறைவான தண்டனை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தலில் கைதான பாஜக இளைஞரணி செயலாளர் – போதை பழக்கத்திற்கு அடிமையானவரென்று தந்தை குற்றச்சாட்டு

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களில் குருதேவ் சிங் என்பவருக்குப் போதை பொருட்கள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறை தண்டணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையிட்டு மனுவின் விசாரணையின்போது உச்சநீதிமன்ற அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிபதிகள் டி.ஒய் .சந்திரா ஷுட் மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு போதை பொருட்கள் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கும்போது சமுதாயத்தின் எண்ணங்களையும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளைஞரணி செயலாளர் – பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டம் என குற்றச்சாட்டு

நிழல் உலகத்தின் வழியாகப் போதைப்பொருள் கடத்துவது மற்றும் விற்பது மக்களைப் போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SOURCE; THE HINDU

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்