Aran Sei

சர்வதேச போதைப் பொருள் அதிபரிடம் என்சிபி விசாரணை மேற்கொள்ளவில்லை – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கருத்து.

கோர்டலியா கப்பலில் பயணித்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரிடம் என்சிபி விசாரணை மேற்கொள்ளவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிரா அரசின் அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

”சர்வதேச போதைப் பொருள் மாஃபியா நபர் கோர்டலியா கப்பலில், அவரது காதலியுடன் நடனமாடிய வீடியோக்கள் உள்ளன. அவர் திகார் சிறையிலும், ராஜஸ்தான் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். அவர் என்சிபி மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவுடன் தொடர்புடையைவர் என்பதால் கைது செய்யப்படவில்லை, நிறுத்தப்படவில்லை பார்ட்டி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டார். மாறாக கப்பலில் நுழைவதற்கு முன்பாக வைத்துச் சிலரை கைது செய்துள்ளனர். இந்த கைது நாடக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானை விடுவிக்க என்சிபி இயக்குநர் சமீர் வான்கடே, ஷாருக்கானிடம் பணப் பேரம் பேசியதாக, சுயாதீன சாட்சி பிரபாகர் சாய்ல் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், நவாப் மாலிக் இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவம் – தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

”அவர்கள் (என்சிபி) பெரிய அமைப்பு. அவர்கள் எல்லாவற்றையும் சரிபார்க்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், வரும் நாட்களில் நாங்கள் அனைத்தையும் பகிரங்கப்படுத்துவோம்.” என மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

போதை பொருள் மாஃபியாவின் தலைவருக்கும் என்சிபி ஆணையர் சமீர் வான்கடேக்விற்கு தொடர்பு இருப்பதால் தான் கோவில் நடைபெற்ற பிந்தைய நிகழ்வுகள்குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என அவர் கூறியுள்ளார்.

பெகசிஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

”ஒரு சில தனிநபர்களை கைது செய்ய மொத்த நாடகமும் துறைமுக முனையத்தில் அரங்கேற்றப்பட்டது. கப்பல் ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. அதில் இருந்த 1,350 பேரில் ஒருவரிடம் கூட விசாரணை நடத்தப்படவில்லை. பார்ட்டிக்கு மாநில உள்துறையிடம் இருந்து எந்த முறையான அனுமதியும் பெறப்படவில்லை. கொரோனா நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றவில்லை” என மாலிக் தெரிவித்துள்ளார்.

என்சிபி ஆணையன் சமீர் வான்கடேவின் பிறப்பு சான்றிதழை வெளியிட்டுள்ள நவாப் மாலிக், “வான்கடேவின் முழுப்பெயர் சமீர் தாவுத் வான்கடே, அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என போலியாக சான்றிதழ் அளித்து ஐஆர்எஸ் பதவி பெற்றுள்ளார். நான் இந்த விசயத்தில் மதத்தைக் கொண்டு வரவில்லை. ஆனால், ஒரு இஸ்லாமியர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று போலி சாதிச் சான்றிதழ் சமர்பித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஏழை பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அதிகாரி ஆகும் வாய்ப்பை அவர் பறித்துள்ளார்.” என குற்றம்சாட்டியுள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் – மீண்டும் பணி வழங்க உத்தரவிட்ட தொழிலாளர் நீதிமன்றம்

”போலியாக சாதி சான்றிதழ் அளித்தது தொடர்பாக முறையாக புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படும். அவர் பதவியை இழக்க நேரிடும். சட்டத்தின்படி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள்வரை தண்டனை வழங்கப்படும்” என நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

வான்கடேவிற்கு பாஜக ஆதரவு அளிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நவாப் மாலிக் ”சமீர் வான்கடேவை அம்பலப்படுத்தினால் பாஜக ஏன் கவலைப்படுகிறது?. வான்கடே நடத்தும் பணம் பறிக்கும் மோசடியில் பாஜகவும் பங்குதாரரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : The Hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்