Aran Sei

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 1௦ ஆப்கானியர்கள் உயிரிழப்பு – மன்னிப்புக் கோரிய அமெரிக்கப் படைத் தலைவர்

ப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் வழியாக அமெரிக்கா நடத்தியத் தாக்குதலில் 1௦ பேர் உயிரிழந்ததற்கு மன்னிப்புக் கோருவதாக அமெரிக்க மத்தியப் படையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கென்சி கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்றையதினம் தெரிவித்த அவர், ஐ.எஸ்.கே.பி  அமைப்பினர் [கோராசன் மாகாணத்தின் இஸ்லாமிய அரசு] மீது நடத்திய தாக்குதலில் கெடுவாய்பாக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “விசாரணையின் மற்றும் புலனாய்வு நிறுவனங்களின் ஆய்வின் அடிப்படையில் , அந்தத் தாக்குதலில் ஏழு குழந்தைகள் உட்பட 10 பொதுமக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்  என்பதை நான் இப்போது உறுதியாக நம்புகிறேன்.”என்றும் பிராங்க் மெக்கென்சி குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தாக்குதலில் இறந்த பொதுமக்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  கூறியுள்ளார்.

மேலும், “இந்தச் சம்பவம் தவறுதலால் நிகழ்ந்துள்ளது, அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். அமெரிக்காப் படையின் கம்மண்டர் என்ற முறையில் நானே இந்தத் தாக்குதலுக்கும், உயிரிழப்புக்கும்  முழுப்பொறுப்பு” என்று  அமெரிக்க மத்தியப் படையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கென்சி கூறியுள்ளார்.

Source:Al jazeera

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்