Aran Sei

‘கொரோனாவிலிருந்து குணமடைய மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வேண்டும்’: குடித்துக் காட்டிய பாஜக எம்எல்ஏ

கொரோனா நோயிலிருந்து மீண்டு வர மாட்டு மூத்திரத்தை குடிக்க வேண்டும் என உத்தரபிரதேசத்தின் பய்ரியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்றைய தினம், 4,01,078 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,18,92,676  ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,38,720 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 4,1287  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவலால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.

சுற்றித்திரியும் பசுகளுக்கு 20 பாதுகாப்பு முகாம் – 12 கோடி ஒதுக்கிய உத்தரப்பிரதேச அரசு

உலக சுகாதார அமைப்பு கொரோனா நோயை எதிர்கொள்ளப் பல்வேறு மருந்துகளையும் நடைமுறைகளையும் அறிவித்து வரும் சூழலில், உத்தர பிரதேச மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங், மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனாவிலிருந்து மீண்டு வரலாம் என தெரிவித்துள்ளதாக நியூஸ்18 இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பசுவை கொல்பவரை மனிதரை கொன்றவராக கருத வேண்டும் – மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி

அது மட்டுமின்றி அவர் மாட்டு மூத்திரத்தை எவ்வாறு குடிக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கத்தையும்  சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

”மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். மக்களுக்காக ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்தாலும், நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான ரகசியம், மாட்டு மூத்திரம் தான். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மாட்டு மூத்திரத்தை குடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக நியூஸ்18 இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

” அறிவியல் விரோத பசு தேர்வை பரிந்துரைக்க முடியாது ” – மேற்கு வங்க பல்கலைக் கழகங்கள் முடிவு

ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் மாட்டு மூத்திரத்தை கலந்து ஒரே வீச்சில் (Gulp) குடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு குடித்ததற்கு பிறகு அரை மணி நேரத்திற்கு வேறு உணவு எதுவும் உட்கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

’பசு மாடு அறிவியல்’ தேர்வு திடீர் ஒத்திவைப்பு – தேர்வுக்கான பாடத்திட்டமும் இணையத்திலிருந்து நீக்கம்

மாட்டு மூத்திரம், கொரோனா நோய் மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கும் குறிப்பாக இதய நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சுரேந்திர சிங்  கூறியுள்ளார்.

பசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது

பாஜக தலைவர்கள் மாட்டு மூத்திரத்தை குடிக்க கோரி வலியுறுத்துவது முதல்முறை அல்ல, கடந்த ஆண்டு மேற்கு வங்க பாஜகவின் மாநில தலைவர் திலிப் கோஷ், ”இது இந்தியா, இது கிருஷ்ணரின் மண், இங்குப் பசுக்கள் தெய்வம், அவை வணங்கப்படும். நாங்கள் ஆரோக்கியத்துடன் வாழ மாட்டு மூத்திரத்தை குடிப்போம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்