இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஒ), ஹைதராபாத்தை தலையிடமாக கொண்டு செயல்படும் டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் இணைந்து கொரோனா நோயாளிகளுக்கான மருந்து ஒன்றை உருவாக்கி இருந்தனர்.
கொரோனா நோயாளிகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விரைவில் அவர்களைக் குணமடைய செய்யும் என சொல்லப்ப்பட்ட இந்த மருந்திற்கு 2 டியாக்சி டி-குளுக்கோஸ் (2டிஜி) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மருந்தைப் பெற விரும்புபவர்கள், ரெட்டீஸ் ஆய்வகத்திற்கு, மின்னஞ்சல்கள்மூலம் உரிய தகவல்களையளித்து பெற்றுக்கொள்ளலாம் என ஒரு குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் வரும் வந்துகொண்டிருக்கிறது.
இந்தக் குறுஞ்செய்தியின் உண்மைத்தன்மை அறிய டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்தின் இணையதளத்தில் தேடியபொழுது அப்படி எதுவும் இல்லை.
இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்
ரெட்டீஸ் ஆய்வகம் அறிவிப்பு வெளியிடாத நிலையில், இது போன்ற தகவல் பகிரப்படுவதற்கான காரணம்குறித்து மருத்துவர்களிடம் விசாரித்ததில், மருந்திற்கு தேவை அதிகரித்து இருப்பதாக ஒரு தோற்றத்தைக் காட்டவும், முன்பதிவு செய்து வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக தெரிவித்தனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.