குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்மு, ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத்தலைவராக இருக்க மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வருத்தமான வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் எதிரிகளை சரி செய்ய அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசுத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பெங்களூரு வந்துள்ள அவர், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோரை சந்தித்துள்ளார்.
நாங்கள் அனைவரும் நீதித்துறையை உயர்வாக மதிக்கிறோம், நீதித்துறையின் எல்லா உத்தரவையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்ல முடியாது. உச்சநீதிமன்றம் ராமஜென்மபூமிக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்ததும், முழு நாடும் அதை ஏற்றுக்கொண்டதும் பாஜகவை உற்சாகப்படுத்தியது. ஆனால், அதே உச்சநீதிமன்றத்தை பாஜகவினர் விமர்சிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் எதிரிகளை சரி செய்ய அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக குற்றம் சாட்டியுள்ளார். தானும் அரசில் சில முக்கிய பதவிகளை வகித்திருப்பதை நினைவுபடுத்தினார். அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஒன்றிய அரசின் நிறுவன்ங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றியத்தில் ஆளும் பாஜக கட்சி, பணபலத்தைப் பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மாநிலக் கட்சிகளை உடைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை வீழ்த்தி, மக்களின் ஆணையை அவமதிக்கிறது மக்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குடியரசுத் தலைவருக்கான எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
Source: newindianexpress
Udaipur Kanhaiya lal சம்பவம் பாஜகவின் INSIDE JOB | Piyush Manush Interview | BJP GulabChand Kattaria
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.