குடிசைப் பகுதி மக்களுக்கான மறு குடியேற்றம் மற்றும் மறு வாழ்விற்கான வரைவு அறிக்கையைத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. மக்கள் அடுத்த பதினைந்து நாட்கள் கருத்துக்கூற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரண்செய்-யிடம் பேசிய குடிசைமாற்று வாரிய குடியிருப்ப்போர் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின், “தமிழ்நாடு அரசு அவரகதியில் இந்த அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் கருத்து கோரியுள்ளது. மக்களிடம் நேரடியாக கருத்துக் கேட்காமல் இணைய வழியில் மட்டுமே கருத்து தெரிவிக்க வழிவகை செய்தது மோசமானது” என்றார்.
மேலும், தமிழ்நாடு அரசின் அறிக்கையும் கருத்து தெரிவிக்க வேண்டிய படிவமும் ஆங்கிலத்திலே இருக்கிறது. ஆங்கில மொழியில் வெளியிடுவது தவறில்லை. ஆனால், மாநில மொழியிலும் வெளிட்டிருக்க வேண்டும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு அறிக்கைகளை இந்தியில் அனுப்பும்போது, இது கூட்டாட்சி தத்துவத்தைச் சிதைக்கிறது என்கிற குரல்கள் எழுவதை அறிவோம். இவ்வாறு இருக்கையில் தமிழ்நாடு அரசு ஆங்கிலத்தில் அறிக்கையை அனுப்பினால், ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
வெறும் இணைய வழியில் கருத்துக் கேட்பது மட்டும் போதாது. கருத்தைப் பதிவிடுவதற்கு அக்.27 என்பது மிகக் குறுகிய காலக்கெடு. காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். மாநில மொழியில் அறிக்கையை வெளியிட வேண்டும். மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க வேண்டும். கொரோனா பேரிடர் காலத்தை அரசு கவனத்தில் கொண்டு தனிநபர் இடைவெளி விட்டு கண்டிப்பாக மக்களிடம் நேரில் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என்று குடிசைமாற்று வாரிய குடியிருப்ப்போர் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் அரண்செய்-யிடன் தெரிவித்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.