டாக்டர் அம்பேத்கர் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவர் பள்ளியில் சேர்ந்த நவம்பர் 7 ஆம் தேதியை இந்தியா முழுவதும் மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கரின் பூர்வீக கிராமமான அம்பாடாவேயில் அம்பேத்கரின் கலசத்துக்குப் பூஜை செய்து, புத்தருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் ராம்நாத் கோவிந்த் இவ்வாறு பேசியுள்ளார்.
1900 நவம்பர் 7 ஆம் தேதி அம்பேத்கர் பள்ளியில் சேர்ந்தார். அந்நாளை மாணவர் தினமாக மகாராஷ்டிர அரசு கொண்டாடி வருகிறது.
அம்பேத்கர் உயர்த்தி பிடித்த சமூக நல்லிணக்கம், கருணை, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமூக அமைப்பு இருக்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.