Aran Sei

வரதட்சணை இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது – இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு

ஸ்லாமியர்களின் திருமணங்களின்போது வரதட்சணை பெறப்பட்டால் அந்தத் திருமணங்கள் இசுலாமிய மதத்திற்கு எதிரானது என்று மர்காசி சன்னி ஜமிட் என்ற இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பள்ளிப்பாடம் – காவல்துறை வழக்குப்பதிவு

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியைச் சார்ந்த மர்காசி சன்னி ஜமிட் என்ற செல்வாக்கு மிகுந்த இஸ்லாமிய அமைப்பு, இஸ்லாமிய திருமணங்களின்போது வரதட்சணை பெற்றால் அது மதத்திற்கு எதிரானது என்று அறிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமையால் பல பெண்களுக்குத் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் நிலவுவதகவும் , மேலும் வரதட்சணை இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று அந்த அமைப்பின் தலைவர் மௌலானா நஜம் அலி குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இஸ்லாமியர்களை எதிரியாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜக – : பத்ருத்தின் அஜ்மல்

மேலும், திருமணங்களின்போது டிஜே இசை, பட்டாசு வெடித்தல் போன்ற ஆடம்பர செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும், அது திருமணத்திற்கு கூடுதல் செலவு என்றும் மௌலானா நஜம் அலி கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்