Aran Sei

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது – தமிழ்த்தேசிய பேரியக்கம் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது, அதன் நிலம் – கட்டுமானம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டுமென தமிழ்த்தேசிய பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், வட இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதைப் பயன்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தின் துணையை நாடியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தமிழகத்தை பிரிக்க வேண்டுமென்று இராமதாஸ் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தையே கூறுகிறார்’ – தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

மேலும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞரைப் பார்த்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சீறுகிறார்.

ஸ்டெர்லைட் ஆலையை அதனுடைய வருடாந்தர பராமரிப்புப் பணிக்காகத் திறக்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்நிலையில், அந்த விசாரணையின் போதுதான் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தனது ஆலையைத் திறப்பதற்கான குறுக்குவழியாகப் பயன்படுத்த வேதாந்தா நிறுவனம் மனு செய்தது.

மேலும், “ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனமும், மோடி அரசும் சேர்ந்து சதி செய்கின்றன. இதுகுறித்து கவனம் செலுத்தாமல், தலைமை நீதிபதி பாப்டே திறக்க அனுமதித்தால் என்ன எனக் கேட்கிறார்.

“ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும்” – ஆர்எஸ்எஸ், ஈஷாவால் மிரட்டப்படும் பெ.மணியரசன்

மேலும், இந்திய அரசு வட இந்திய மாநிலங்களில் ஏன் ஆக்சிஜன் உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை, குறைந்தது கொரோனா ஏற்பட்ட கடந்த ஓராண்டுக்குள்ளாவது போர்க்கால வேகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஏன் ஏற்பாடு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்க முன்வரவில்லை!

மத்தியப்பிரதேசம் போன்ற பெரிய மக்கள் தொகையுள்ள மாநிலங்களில் கூட ஒரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ஏற்பாடோ, இரண்டு – மூன்று மாவட்டத்திற்கு ஒரு ஆக்சிஜன் உற்பத்தி ஆலையோ கூட திறக்காமல் இருந்து, மக்கள் உயிர்ப்பலியாகக் காரணமானபாஜக அரசு, தனது கையாலாகாத்தனத்தை மறைக்கவே இந்த முயற்சியை மேற்கொள்கிறது. இந்த முடிவைத் தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்கள் யாரும் இதை ஏற்க மாட்டார்கள்.

‘தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடப்பதை விரும்பவில்லை’ : ஸ்டெர்லைட்டின் மனுவிற்கு தமிழக அரசு பதில்

எனவே, தமிழக அரசு ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது , உடனடியாக அந்த ஆலையின் நிலம் – கட்டுமானம் ஆகியவற்றை கையகப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது வேதாந்தா குழுவினரை வெளியேற்ற வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

source: தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ,கி. வெங்கட்ராமன் அறிக்கை!

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்