Aran Sei

தடுப்பூசி மையங்களுக்கு வெளிய கும்பலாக கூடாதீர்கள்: தடுப்பூசிகளை இன்னும் பெறாத நிலையில் கெஜ்ரிவால் கோரிக்கை

டுப்பூசி மையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் இன்னும் மூன்று மாத காலத்திற்குள், டெல்லியின் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் டெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம், 3.86  லட்சத்துக்கும் மேற்பட்டோர்   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,87,62, 976 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,08,330 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,498  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மே 1 ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் சட்டம் – மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி அமலுக்கு வந்தது

இந்நிலையில், ஒரு இணைய வழி கருத்தரங்கில் கலந்துக் கொண்ட டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ”எங்களுடைய நோக்கம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் டெல்லியின் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்துவதே. ஆனால் நாங்கள் இன்னும் தடுப்பூசிகளைப் பெறவில்லை, நாங்கள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தடுப்பூசிகளை பெற்று விடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசின் அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்கும் மசோதா: ஆம் ஆத்மி கடும் கண்டனம்

மேலும், ”பொது மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், தடுப்பூசி மையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்து நின்று சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என்பதையே நான் மக்களிடம் முன் வைக்கும் ஒரே கோரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல்: மத்திய, மாநில அரசுகளே காரணம் – சர்வதேச நீதிபதிகள் ஆணையம்

மேலும், ”நாங்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்துவோம் என்பதை உறுதியளிக்கிறேன். எப்போது நீங்கள் தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதையும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆக்ஸிஜன் தேவைக்காக தனியார் திட்டத்திற்கு ஒரு கோடி நிதியளித்த சச்சின் – பி.எம் கேர்ஸ் மீது நம்பிக்கை இல்லையா?

தடுப்பூசிகள் கொள்முதல், அது விநியோகிக்கப்படும் முறை தொடர்பாக மக்களுக்கு தொடர்ச்சியாக தெரிவிக்கப்படும் என்றும் மக்கள் தடுப்பூசிகளை நம்பி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்