Aran Sei

”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” – ஆ.ராசா

ங்களை தனித் தமிழ்நாடு கேட்க விட்டுவிடாதீர்கள், மாநில சுயாட்சி தாருங்கள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டை மேட்டில் திமுக சார்பில், தமிழ்நாடு  முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில், நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உதய்பூர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பா? – பாஜக தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “’பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு’ என்று பெரியார் சொன்னார். பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதில் இருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

திரௌபதி முர்மு! ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவராக இருக்க மாட்டேன் என்று உறுதியளியுங்கள் – யஷ்வந்த் சின்ஹா ​

அமித்ஷாவுக்கு சொல்கிறேன், பிரதமருக்கு சொல்கிறேன். உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டு சொல்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

Periyar தான் எங்க ஆளு | Jeeva Sagapthan Interview | Swaminathan | Rangaraj Pandey

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்