Aran Sei

சிஏஏ சட்டத்திற்கு எதிராக சிகாகோ நகர சபையில் தீர்மானம் – சட்டம் குறித்து புரிதல் இல்லாமல் உறுப்பினர்கள் குழப்பம்

மெரிக்காவின் மிக சக்திவாய்ந்த நகர சபைகளில் ஒன்றான சிகாகோ நகர சபையில், இந்தியாவில் உள்ள மனித உரிமை நிலைமைகள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது தெரியாததால், பல உறுப்பினர்கள் சங்கடமாக உணர்ந்தனர் என சிகாகோ நகர மேயர் லோரி லைட்ஃபுட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தீர்மானத்திற்கு எதிராக 26 வாக்குகளும், ஆதரவாக 18 வாக்குகளும் பதிவானதை அடுத்து தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

சாதி மறுப்பு திருமணம் செய்தவரின் வீடு தாக்கப்பட்ட விவகாரம் – 7 பேர் கைது

இது போன்ற பிரச்னைகளில் கருத்து தெரிவிப்பது அல்லது தீர்ப்பு வழங்குவதை அமெரிக்க அரசாங்கம் செய்ய வேண்டும், உள்ளூர் நகர அரசாங்கங்கள் அல்ல என தெரிவித்த லைட்ஃபுட், “இந்த நிகழ்வில் தீர்மானம் குறித்து விவாதிப்பதில் நகர சபைக்குத் தயக்கம் இருந்தது. ஏனெனில் பலர் தங்களிடம் போதிய தகவல்கள் இல்லை என்பது போன்று உணர்ந்தனர்.” எனத் தெரிவித்தார்.

மேலும், சிகாகோ நகரில் இதைவிட பல பிரச்னைகள் உள்ளன என கூறினார்.
“சிகாகோவின் மேயராக இருந்தாலும், பைடனின் நிர்வாகத்தை மீறி எதுவும் செய்ய முடியாது” என லைட்ஃபுட் தெரிவித்தார்.

பிற நாட்டின் உள்நாட்டு விவகாரத்திற்குள் நகர சபை தலையிடுவதற்கான அதிகாரம் இல்லை என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, கவுன்சிலின் பல உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்