Aran Sei

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் – குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவு

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கப்படுவது தடை செய்ய வேண்டுமென்று கூறியுள்ள குஜராத் உயர்நீதிமன்றம், அது குறித்த வழிகாட்டுதல்களையும் அம்மாநில அரசுக்கு வழங்கி உள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டுதல்களில், சீக்கிய மதத்தைத் தவிர அனைத்து மதங்களும் மாதவிடாயின்போது, பெண் தூய்மை அற்றவள் என்று குறிப்பிடப்படுகிறது என்று உயர்நீதி மன்றம் மேற்கோளிட்டு கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதவிடாய் குறித்த தவறான எண்ணம் – உடைத்தெறிந்த விவசாயிகள் போராட்டக்களம்

குஜராத்தில், 60 கல்லூரி மாணவிகளை, மாதவிடாய் காலத்தில் உள்ளனரா என்று சோதிக்க, ஆடையை களைய வற்புறுத்திய சம்பவத்தை ஒட்டி, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுமீதான விசாரணையின் போது, குஜராத் உயர்நீதி மன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது என்று லைவ் லா செய்தி கூறுகிறது.

நிர்ஜாரி முகுல் சின்ஹா என்பவர் தாக்கல் செய்துள் அந்த மனுவில், மாதவிடாயின் போது பெண்களை ஒதுக்கிவைப்பது, இந்திய அரசியல் சாசன பிரிவு 14,15,17,19 மற்றும் 21ன் படி, பெண்களின் வாழ்வுரிமையை மறுக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளதாக லைவ் லா கூறுகிறது.

மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள்: ஸ்காட்லாந்தை ஏன் பின்பற்ற வேண்டும்? – சினேகா பெல்சின்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் உயர்நீதி மன்றம், நமது சமூகம் மாதவிடாயை புறக்கணிப்பட்ட ஒன்றாகக் கருதுவதாகவும், இந்தப் புறக்கணிப்பு பாரம்பரிய நம்பிக்கைகளால் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் மாதவிடாய் குறித்து இயல்பாய் பேச மறுக்கிறோம் என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதவிடாய் காலத்தின் போது நகரத்து பெண்கள் பூஜை அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் , கிராமத்து பெண்கள் சமையல் அறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ,பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் உரிமைக்கான போராட்டமே பாசிச எதிர்ப்பின் முதல் குரல் : ஜெ.காவ்யா

இந்தியாவில் 88% பெண்கள், நாப்கின்களுக்கு பதிலாக சாம்பலையும், இலைகளையும், துணிகளையும் பயன்படுத்துகிறார்கள் என்றும், மாதவிடாய் காலத்தில் பெண்களின் சுகாதாரம் குறித்து உறுதி படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் குஜராத் உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளதாக லைவ் லாவின் செய்தி கூறுகிறது.

இதுகுறித்து உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், மாதவிடாய் காலத்தில், பெண்கள் ஒதுக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்றும், மாதவிடாய் குறித்த புரிதலை சமூகத்தில் அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்