Aran Sei

ஒடுக்கப்பட்டவருக்கு முடிவெட்ட மறுத்த ஆதிக்க சாதியினர் – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

Image Credits: New Indian Express

ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த ஆதிக்க சாதி சலூன் கடை உரிமையாளரும் பாதிக்கப்பட்டவரும்  வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவானதைத் தொடர்ந்து முடிவெட்ட மறுத்தவரை கைது செய்துள்ளது காவல்துறை.

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊனத்தூர் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் வசித்து வரும் ஆண்களுகள் அப்பகுதியில் செயல்பட்டு வரும் சலூன் கடைகளில் முடி திருத்தம் மற்றும் சிகை அலங்காரங்கள் செய்து கொள்வது வழக்கம்.

‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – பூவுலகின் நண்பர்கள்

இதனிடையே சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஊனத்தூர் பகுதியில் நியூ ஸ்டைல் என்கிற சலூன் கடை நடத்தி வருகிறார், இன்னிலையில் நேற்றிரவு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பூவரசன் என்பவர் சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்து கொள்ள சென்றுள்ளார், அப்போது கடை உரிமையாளர் மற்றும் பெண்மணி ஒருவர் என மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு முடி திருத்தம் செய்ய முடியாது எனக்கூறி வாக்குவாதம் செய்வதோடு முதலமைச்சரிடமே சொன்னால் கூட ஒன்றும் செய்ய முடியாது. இது ஊர் கட்டுப்பாடு என்றும் உங்க ஏரியாவில் போய் வெட்டிக் கொள்ளுங்கள் எனவும் வாக்கு வாதம் செய்து முடி திருத்தம் செய்ய மறுத்துள்ளனர்.

ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான நீண்ட பயணம் – பாகம் 2 – மீனா கந்தசாமி

இதுவரை ஒடுக்கப்பட்டவர்கள் யாருக்கும் இந்த ஊரில் முடி வெட்டப்படவில்லை. இந்த ஊருக்கு என்று ஒரு கட்டுப்பாடு உள்ளது. உங்கள் ஊரில் தனியாக சலூன் கடை வைத்து முடி வெட்டிக் கொள்ளுங்கள் என ஆதிக்க சாதியினர் பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பூவரசன் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். மேலும், அவரின் புகாரை ஏற்று பழனிமுத்து என்பவரைக் கைது செய்துள்ளது காவல்துறை. மேலும், சலூன் கடை உரிமையாளர் லோகு,  கட்டிட உரிமையாளர் அன்னக்கிளி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்