Aran Sei

காசிப்பூரில் விவசாயிகள் போராட்டத்தை கலைத்த பாஜக – ஜாட் சமூகத்தின் கோபத்தை சீண்டியுள்ளதா?

farmers

காசிப்பூர் பகுதியில் விவசாயிகள் போராடுவதற்கு பாஜக அரசு தடைவிதித்து, அவர்களை அகற்ற முற்பட்டதால் அது ஜாட் சமூகத்தினரை கோபமடைய செய்துள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து 64 நாட்களாகப் போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தினத்தில் டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி எதிர்பாராதவிதமாகக் வன்முறையில் முடிந்துள்ளது.

முதல்முறையாகச் சிங்கு எல்லையில் நடைபெற்ற கலவரம் – விவசாயிகள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை

இந்நிலையில், டெல்லி, உத்தரப் பிரதேசம் மாநிலங்களை இணைக்கும் எல்லையான காசிப்பூரில், விவசாயிகள் போராட காசிப்பூர் மாவட்டம் நிர்வாகம் அனுமதியை மறுத்து விவசாயிகளை அங்கிருந்து வெளியேற்றம் செய்வதற்காகக் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 28) ஆயிரக்காணக்கில் காவல்துறையினரை இறக்கியுள்ளது.

இதனால் அப்பகுதியில் இருந்த விவசாயிகளைக் காவல்துறையினர் போராட்டக்களத்திலிருந்து வெளியேற்ற முற்பட்டபோது, காவல்துறைக்கும் அங்கு
இருந்து கலைய மறுத்த விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  தெரிவித்துள்ளது.

’கற்களை வீசுவதால், விவசாயிகளின் தைரியத்தை உடைத்துவிட முடியுமா?’ – ராகுல் காந்தி கேள்வி

விவசாயிகள் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்து, கவனம் பெறாமல் இருந்து வந்த காசிப்பூர். தற்போது நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து இப்பகுதி கூடுதல் மக்கள் கவனம்  பெற தொடங்கியுள்ளது.

காசிப்பூரில் பாரதிய கிஷான் சங்கத் தலைவரும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவருமான ராகேஷ் திக்கைத் வழிநடத்திய, விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க முற்பட்ட சம்பவம் ஜாட் சமூகத்தினர் இடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  குறிப்பிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் பலம் அதிகம் கொண்டுள்ளதாக ஜாட் சமூகத்தினர் அறியப்படுகின்றனர்.

‘வடஇந்தியாவின் “ஜெய் ஸ்ரீராம்” மேற்கு வங்கத்தின் முழக்கமல்ல. ஜெய் வங்காளமே எங்களுடையது’ – திரிணாமூல் காங்கிரஸ்

போராட்டக்களத்தில் காவல்துறையினர் ராகேஷ் திக்கைத் உள்பட பல விவசாயிகளைத் தவறாகக் கையாண்டது குறித்து அவர் கண்ணீர் மள்க பேசிய காணோளி, அதிர்ச்சையை ஏற்படுத்தியதாக அவரின் சகோதரர் நரேஷ் திக்கைத் தெவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  குறிப்பிட்டுள்ளது.

இதனால் காசிப்பூர், சிங்கு, திக்கிரி உள்ளிட்ட டெல்லியை சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் ஜாட் சமூகத்தினர் திரளானோர் ஆதரவு கரம் நீட்டி அங்குகுவியத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்திற்கான இடஒதுக்கீடு மறுப்பு – அண்ணா பல்கலையில்., எம்.டெக் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

பாஜக கூட்டணி அரசு நடைபெற்றுவரும் ஹரியானாவில், ஜாட் சமுகத்தினரின் ஆதிக்கம் உள்ளது.  துணை முதலமைச்சரும் ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுத்தலா, விவசாயிகள் பிரச்னையில் பாஜவிற்கு ஆதரவாக நிலைப்பாடை எடுப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு  நெருக்கடிகள் வர அதிகரித்துள்ளாத தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்