ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையொன்று கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் சிகிச்சைக் கட்டணமாக 14 லட்சம் விதித்தது குறித்து அவரது மனைவி ஒன்றிய அமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஏழைகளின் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் – தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
மேலும், உயிரிழந்த மருத்துவர் பஞ்சாப் மாநிலத்தில் வசிப்பதாலும், அவர் மே 3 இறந்த நிலையில், மே 4 ஹரியானா மாநில அரசு முறைப்படுத்திய கட்டணத்தை அறிவித்ததாகவும், எனவே இந்தக் கட்டண முறை பொருந்தாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் மருத்துவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,” என்னுடைய கணவர் கடந்த ஏப்ரல் 12 அன்று அனுமதிக்கப்பட்டார். மே 3 அன்று மரணமடைந்தார். மருத்துவமனை போதிய சிகிச்சை அளிக்ககாததாலேயே எனது கணவர் உயிரிழந்தார். மேலும், ஹரியானா அரசு கடந்த ஜூன் மாதம் வழங்கிய உத்தரவை மதியாமல் அதிகப்பட்ச கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – 6 நோயாளிகள் உயிரிழப்பு
எனவே, மாநில அரசின் உத்தரவை மீறிய அந்த மருத்துவமனை நிர்வாகம்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தான் செலுத்தியக் கட்டங்களைத் திரும்ப அளிக்க வேண்டுமெனவும், அரசின் விதிகளைப் பின்பற்றாத மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்யவேண்டுமெனவும் அவரது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
source; the new indian express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.