Aran Sei

இசட் பாதுகாப்பு வேண்டாம்; சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தாலே போதும் – ஒவைசி

பிப்ரவரி 3 அன்று உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முடித்து விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஒவைசி தெரிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று (பிப்ரவரி 4) ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒவைசிக்கு இசட் வகை உயர் பாதுகாப்பை வழங்க முன்வந்தது. ஆனால் மக்களவையில் பேசிய ஓவைசி, தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 7 அன்று மக்களவையில் அறிக்கை வெளியிடுவார் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை உபா பிரிவின் கீழ் ஏன் கைது செய்யப்படவில்லை? அவர்கள் மீது ஊபா சட்டம் பாய வேண்டும் என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
“நான் வாழ வேண்டும், பேச வேண்டும். ஏழைகள் பாதுகாப்பாக இருக்கும்போது நானும் பாதுகாப்பாக இருப்பேன். ஏழை, எளியோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு அளித்தால், நானும் பாதுகாப்பாக இருப்பேன்.
வலதுசாரிகள் இந்தியாவைக் கைப்பற்றினால் நாட்டின் பன்மைத்துவத்தை அழித்து விடுவார் என்று 2017 ஆம் ஆண்டிலேயே நான் எச்சரித்தேன். இந்தியாவின் சொத்து என்பது, அன்பும் பாசமும்தான், ஆனால் தற்போது வெறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சச்சின் பண்டிட் மற்றும் ஷுபம் ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் சச்சின் பண்டிட் என்பவர் பாஜக உறுப்பினர் என்பதை அவரது ‘தேஷ்பக்த் சச்சின் இந்து’ என்ற பேஸ்புக் கணக்குக் காட்டிக்கொடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய பாஜக தலைவர்களுடன் அவர் நெருக்கமாக எடுத்துள்ள பல்வேறு புகைப்படங்கள் பேஸ்புக்கில் இருந்துள்ளது.
Source : indianexpress
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்